Thursday 26 November 2020

அரிஸ்டோட்டிலின் அரசியற் சிந்தனைகள்





மனித சமுதாயம் எப்போது சிந்திக்க தெடங்கியதோ அன்று முதற்கொண்டு மனிதர்களத நடவடிக்கைகள் அறிஞர் பெருமக்களின் சிந்தனப்பொக்கை ஒட்டியே இருந்து வந்துள்ளன. எக்காலத்திற்கும் இந்த உண்மை பொருந்தும்.

எதிர்காலம் நம்மைப் பொறுத்தே உள்ளது. உருவாகும் சரித்திரத்தில் நாமும் ஓர் அங்கம்தான் என்னும் கருத்தே எச்செயலுக்கும் தூண்டுகோலாக அமைந்திடும். சிந்தனைகளை பற்றிய அறிவு இதற்குப் பெருந்துணையாக இருந்திடும். சுமார் இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய சிந்தனயாளரான அரிஸ்டோட்டிலின் சிந்தனைகள் உலக வளர்ச்சிக்கு உரமாக அமைந்தன என்றால் மிகையாகாது. நவீன சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்கள் உள்ளிட்ட அனைவருக்குமே அரிஸ்டோட்டில் ஓர் துருவ நட்சத்திரமென விளங்கி வருகிறார். சிந்தனை எதற்காக எனச் சிந்தித்த மாபெரும் சிந்தனை சிற்பி இவராவர்.

நல்ல சட்டங்களினால் தேசம் ஆட்சி செய்யப்படுவதனைவிட நல்ல மனிதனொருவனால் அது ஆட்சி செய்யப்படுவதே நாட்டுக்கு சிறப்பெனக் கூறியவர் அரிஸ்டோட்டில். பிளோட்டோவின் மாணவரான அரிஸ்டோட்டில் கிரேக்க அரசியல் சிந்தனையாளர்களில் தலை சிறந்தவர்களிலொருவராகக் கருதப்படுகின்றார். மேலைநாட்டு அரசியல் கோட்பாடுகளை வகுத்த இவரது பிறப்பு கி.மு 384இல் இடம்பெற்றது.பிறப்பினால் ஏதென்ஸ் நாட்டவரல்ல. இவர் கிரேக்கத்தின் குடியேற்றமான மசிடோனியாவில் உள்ள ஸ்ரெஜிராவில் பிறந்தவர். தந்தையார் நிக்கோமாக்ஸ் இவர் அரசவைத்தியராகப் பணியாற்றியவர். இப்பின்னணியில் நீண்டகாலமாகவே அரசகுடும்பங்களுடன் தொடர்புகள் இவருக்கிருந்தது. அரிஸ்டோட்டிலின் தந்தையார் இயற்கை விஞ்ஞானத்தில் ஈடுபாடு காட்டியிருந்ததுடன் அதன்பொருட்டு ஒரு விலங்கு ஆய்வு கூடத்தினையும் கிரீஸில் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிளோட்டோவினது மெய்யறிவு ஆற்றலினால் கவரப்பட்ட இவர் கற்பனையாக ஆராய்கின்ற வாழ்க்கைதான் முழுமையான இன்பத்தினைத் தருவாதாக எணணினார். தந்தையாரின் மரணத்தினைத்தொடரந்து அரிஸ்டோட்டில் அவரது தொழிலான மருத்துவத்தினை மேற்கொள்ளுமாறு குடும்ப உறுப்பினர்களால் கேட்டுக்கொள்ளப்பட்ட போதும் அதனை விரும்பாத இவர் அரசியல் தத்துவம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பிற்காலத்தில் சிறப்பும் பெற்றார். மேலும் இவர் பிளேட்டோவின் இறப்பினைத் தொடர்ந்து அவருடைய கல்விக்கழகத்தில் 17 வருடங்கள் உறுப்பினராக இருந்து அக்கல்விக் கழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் பணியாற்றினார்.

பிளேட்டோவினது சீடராக இவர் இருந்தபோதும் சிந்தனைச் சுதந்திரத்திற்கே முன்னுரிமையினை வழங்கினார். “நான் பிளேட்டோவின் நண்பன்” எனக் குறிப்பிட்டார். இவர் பிளேட்டோவினைப் போன்று அரசியல்வாதியாக இருந்து பிற்காலங்களில் தத்துவஞானியாக மாறியவர் அல்ல.

பிளேட்டோவின் இறப்பின் பின்னதாக மசிடோனியாவிற்குச் சென்ற இவர் அங்கு அலெக்சாண்டருக்குக் கல்வி போதித்தார். கி.மு334இல் ஏதேன்ஸ் திரும்பிய இவர் அங்கு தனியாக லீசியம் எனப்பட்ட கல்விக்கூடத்தினை ஆரம்பித்தார். அக்காலப் பகுதியில் பிளேட்டோவின் கல்விக்கூடம் படிப்படியாக மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து வந்துகொண்டிருந்த சூழலில் இவரது கல்விக்கூடம் அதற்கு மாற்றீடாக அமைந்திருந்தது. வானியல், உயிரியல், உடற்கூற்றியல், உடலியல், அளவையியல், அரசியல், இலக்கியம், தத்துவம், இயற்கை விஞ்ஞான அறிவியல் போன்ற துறைகளை அவை பிரதிபலித்தன.

பிளேட்டோவின் மாணவராக அரிஸ்டோட்டில் காணப்பட்டாலும் அவருடைய சில கருத்துக்கள் அரிஸ்டோட்டினால் கண்டிக்கப்பட்டுள்ளன என்பதும் அவதானிக்கத்தக்கது. பொதுவாகவே இவர் எந்த ஒரு விடயத்தினையும் தான் சொல்வதற்கு முன்னதாக அவ்விடயந் தொடர்பாக ஏற்கனவே உள்ள கருத்துக்கள நனகு ஆராய்ந்து பார்த்து பின்பு தான் தன்னுடைய சிந்தனைகளை வெளியிடுகின்ற இயல்பினைக் கொண்டவர்.
பிளேட்டோவினால் ஆக்கப்பட்ட அரிஸ்டோட்டில் மூலமாகவே பிளேட்டோவினைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிகின்றது. அந்தவகையில் அரஸ்டோட்டிலின் அரசியல் சிந்தனைகள் தொடர்பாக நோக்கலாம்.

அரசினது நோக்கம் மக்களது மகிழ்ச்சியும் ஒழுக்கமுமே என்ற கருத்தினை வலியுறுத்துகின்றார். மனிதன் பேசுதிறன் பெற்றிருப்பதனால் அது அவனுடைய அரசியல் தன்மைக்கான சாட்சயென அரிஸ்டோட்டில் குறிப்பிடுகிறர். பெரும்பாலானவர்களுடைய கருத்து அரசியல் என்ற அரிஸ்டோட்டிலின் படைப்பானது இவரது வாழ்நாளின் கடைசிக்காலத்தில் எழுதப்பட்டதென்பதே. அரிஸ்டோட்டிலின் மாணவர்களில் பலர் பொருள் ஒழுங்கில் சில குறைபாடுகள் இருப்பதாகக்கூறி இதில் சொல்லப்பட்ட கருத்துககளை ஏற்பதற்குத் துணியவில்லை. இருப்பினும் இன்று அரசியல் என்ற இந்நூலானது உலகில் காணப்படுகின்ற முக்கியத்துவம் வாய்ந்த நூல்களிலொன்றாகக் கருதப்படுகின்றது. மலும் பலரது நடைமுறை வாழ்விற்கு இந்நூல் பொருத்தப்பாடாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவர் காரியத்திலிருந்து காரணத்தை அறிந்துகொள்கினற் தர்க்கமுறையினை லகுக்கு வழங்கினார். பிளேட்டோ தான் காணுகன்ற இலட்சிய அரசியல் உள்ள பொதுவுடைமை சம்மந்தமான கருத்துக்களை இவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

அரிஸ்டோட்டில் பொதுவுடைமை முறையில ஐக்கியம் ஏற்படமட்டாதெனக் கூறுகின்றார்; இதனால் இவர் பொதுவுடைமையை ஏற்றுக்கொள்ளாது அரசின் ஒற்றுமையுணர்வு என்ற கருத்தினை மையமாகக் கொண்ட அரசியலமைப்பின் தொடர்பகளை அராய்கின்றார் எனலாம். அரிஸ்டோட்டில் தர்க்கம், ஒழுக்கவியல், பேச்சுக்கலை, பௌதீகம், அரசியல், உளவியல், அரசியலமைப்புக்கள் போன்ற துறைகளில் பல நூல்களை எழுதியுள்ளார். இவரால் எழுதப்பட்ட நூல்கள் பற்றிச் சரியான தகவல்கள் இல்லை. அரிஸ்டோட்டடில் எல்லா கிரெக்க நகர அரசுகளுக்கும் ஒரே அரசாங்கம் தேவையென்பதனை வலியுறுத்தியிருந்தார். இருப்பினும் சமகாலத்தில் வாழ்ந்த அரசியல் தலைவர்கள் அனைவரும் இவருடைய அறிவுரையினைக் கேட்கவில்லை. சமகாலத்தில் சிரேக்க நாட்டுச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவகையில் தான் இவரது அரசியல் சிந்தனைகளும் அமைந்திருந்தன. உதாரணமாக அடிமைக் கொள்கையினை இவர் ஆதரித்தமை குறிப்பிடத்தக்கது.

பிளேட்டோவினைப் போன்று கற்பனை அரசினை இவர் வர்ணித்துள்ளார். அத்துடன் இவர் வரலாற்று உண்மைகளின் அடிப்படையில்அரசியல் கருத்துக்களை எடுத்துக்காட்டினார். ரசின் முக்கியமான குறிக்கோளாக மக்களது முன்னேற்றமே இருத்தல் வேண்டும்.

அரிஸ்டோட்டில் தான் வாழ்ந்த காலப்பகுதியில் காணப்பட்ட நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசியல் அமைப்புக்கள் பலவற்றினை ஆராய்ந்து அவை எவ்வாறு செயற்பட்டனவென்பதை எடுத்துரைத்தார். இவரது இத்தகைய அரசியல் கோட்பாடுகளை அரசியல் மற்றும் அரசியல் கோட்பாடுகள் போன்ற நூல்கள் விபரிக்கின்றன. அரசியலென்ற நூலின் முற்பகுதியில் அரசு மற்றும் குடும்பம் போன்ற சமுதாயக் கோட்பாடுகளை விபரித்துள்ளார். லிஸியஸ் கழகத்தில் அரிஸ்டோட்டில் இருந்த சமயததில் தான் 158விதமான அரசியல் அமைப்புச் சட்டஙகள ஆராய்ந்த அறிந்த கொண்ட பின் “அரசியல்” என்ற நூலை எழுதினார். அரிஸ்டோட்டிலின் அரசியல் தத்துவம் நகர இராஜ்ஜியங்களின் ரசியல் தத்துவமாக அமைந்தது. அவை அனைத்தும் அவரால் பரிசீலனை செய்யப்பட்டவை. மறைந்து போன நகர இராஜ்ஜியங்களின் அரசியல் அமைப்பச்சட்டங்கள், தன்னைச்சுற்ற நடக்கும் நடப்பு நிலையான ஒன்றல்ல என்றும் நகர இராஜ்ஜியங்கள்தாம் இலட்சிய இராஜ்ஜியங்கள் அவை புத்துயிர் பெற்றுவிடம் என்றும் எண்ணியே தன்னுடைய “அரசியல் “  என்ற நூலை எழுதினார். 

மேலும் அதில் அரசினது தோற்றம் தொடர்பாகவும் அதனது இன்றியமையாமை சம்மதமாகவும் கோட்பாடுகளை எடுத்துக் காட்டுகின்றார். மனிதர்களைக் கொண்ட அவைகள் எல்லாவற்றிலும் அரசென்பது உயரதரமான வடிவத்தில் காணப்படுகின்றது. மக்கள் நிறைந்த தொகுதியே அரசு. இக்காலத்தின் அடிப்படையில் நோக்குகின்ற போது குடும்பம், கிராமம் என்பவைகளுக்குப் பிற்பட்டவையே. இருப்பினும் தத்துவரீதியாகப் பார்க்கின்றபோது “அரசு” என்பதே முதலிடத்தில் காணப்படும். ஆணும் பெண்ணும் சேர்வதனால் குடும்பம் ஏற்படுகின்றது.
 பல குடும்பங்கள் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற நோக்குடன் சேர்வதனால் கிராமம் தோன்றுகின்றது. கிராமங்கள் பல இணைவதன் மூலமாக அரசு தோன்றுகின்றது. எனவெ அரசு மனிதனின் நல்வாழ்வின் பொருட்டுத் தோன்றி மக்கள் முன்னேறறத்தின் பொருட்டுத் தொடர்ந்து நீடித்து வருகின்றது.

அரசு எவ்வாறு தோன்றியதென்பது பற்றிக் குறிப்பிடுகின்றபோது இவர் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் முன்னேற்றத்தினை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கூறினாரே தவிர உண்மையான அரசியல் முன்னேற்றம் பற்றியதாக அரிஸ்டோட்டிலின் கருத்துக்கள் காணப்படவில்லை என்ற குறைபாடு உள்ளது. அரசாங்கம்; எந்த அடிப்படையில் செயற்பட வேண்டுமெனக் கூறினாரே தவிர அரசுக்கு இருக்க வேண்டிய அம்சங்கள் பற்றி அவர் அதிகம் சொல்லவில்லை. மேலும் ஒரு அரசு எப்படியிருக்க வேண்டுமெனக் கூறுகின்றபோது நியாயமும் நட்பும் சேர்ந்த வகையில் அரசு அமைதல் வேண்டுமெனக் குறிப்பிடுகின்றார். முதலாவது மக்கள் தங்களது நலல சிந்தனையின் மூலமாக அரசாங்கத்தினைச் செயற்பட வைப்பது. அதுபோன்N;ற நட்பும் சமுதாயம் ஒவ்வொன்றுக்கும் அவசியமானது. நட்பினடிப்படையில் அமைக்கப்படுகின்ற அரசானது பலம் மிக்கதாக அமைந்து காணப்படும். குடும்பத்தினைக் கட்டுப்படுத்துகின்ற அதிகாரம் அரசாங்கத்திடம் காணப்பட்டது. கல்வியினை வழங்குவதென்பதனை அரசின் கடமைகளிலொன்றாகவும் அரிஸ்டோட்டில் கருதினார்.

இத்தகைய கோட்பாடடில் இருந்தே அரசினது இன்றியமையாமை பற்றிய கோட்பாடு உருவாகியதெனலாம். மனிதன் அரசியல் இயல்பினக் கொண்ட ஒரு பிராணி.  இவன் தன்னைப்போல ஏனைய மனிதர்களுடன் இணைந்த வகையில் அரசில் வாழாதவன். அவன் விலங்கினத்தைச் சேர்ந்தவனாக இருத்தல் வேண்டும் அல்லது தெய்வத்தினுடைய இனத்தினைச் சேர்ந்தவனாக இருத்தல் வேண்டும். அரசனால் மேற்கொள்ளப்படுகின்ற அதிகாரமானது குடும்பத்தில் தந்தையின் அதிகார வழக்கத்திலிருந்து தோற்றம் பெற்றாலும் அரசும் குடும்பமும் வெவ்வேறானவை.


ஆட்சியாளர் எல்லா மக்களின்மீதும் ஒரேவிதமான அதிகாரத்தைச் செலுத்துதல் வேண்டும். இவர் அரசியலைச் சட்ட அமைப்பென வர்ணிக்கிறார். கலப்பான அரசியல் சட்டத்தினைக் ஏற்றுக்கொள்கிறார். சட்டங்கள் சிறப்பாக அமைகின்றபோது ஆட்சியும் சிறப்பாக அமையும். நா டுநல்ல குடிமக்களையும் உள்ளடக்கியிருத்தல் வேண்டும். சாதாரண மனதனுக்கு குடும்பத்தினைப் பொலவெ அவனுக்கு நாடும் அவன் வாழ்கின்ற சமுதாயமும் இன்றியமையாததாகின்றது. இவர் ஜனநாயகத்தின் அவசியத்தினை உணர்ந்திருந்தார்.

மனிதர்களை ஆண்,பெண் வேறுபாடு, தொழில், இயற்கை, இனப்பண்பாடு எனும் 4 கொள்கைகளின் அடிப்படையில் பிரித்து பார்த்த இவர் பெண்களை அரசியலுக்கு ஏற்றவர்களல்ல என ஒதுக்கி வைக்கிறார். இயற்iயின் அடிபபடையில் மனிதர்களை சுதந்திரமானவர்கள், அடிமைகள் என வேறுபடுத்தி அடிமைகளையும் அரசியலுக்கு பொரத்தமற்றவர்கள் என குறிப்பிடுகிறார்.

உன்னதமான கற்பனை அரசானது மக்களின் பொருளாதார, மூக, அரசியல் வாழ்வ்pறகுப் பாதுகாப்பளித்தல் வேண்டும். அரசு வேற்றுமையில் ஒற்றுமையினை ஏற்படுத்துகின்ற வகையில் அமைக்க வேண்டும். அரிஸ்டோட்டிலின் கற்பனை அரசில் காணப்படுகின்ற மக்கள்  பிரிவுகளுக்குள் அடங்குகின்றார்கள. குருமார்கள், நட்டங்கள இயற்றுபவர்கள், ஆட்சயாளர்கள், டையினர், முதலாளிகள், தொழிலாளிகள், சிறுகைத்தொழில்களை மேற்கொள்ளுபவர்கள் என்ற பரிவினர்களே அவர்கள். இத்தகைய பிரவனர்கள் சறப்பாகத் தங்களுக்கேயுரிய கடமைகளைச் சிறப்பாக செய்கின்றபோதுதான் கற்பனை அரசானது சிறப்பாகச் செயற்படமடிகின்றது. .வர் மக்கள் தொடர்பாக முன்வைத்த கோட்பாட்டில் நகரரசு என்பதனையும் கிரேக்கர் என்ற இன உணர்வினையும் அடிப்படையாகக் கொண்டு கூறியுள்ளார். இவரது கருத்தின் பிரகாரம் குடிமக்கள் என்பவர்கள் ஆளுதற்கும் ஆளப்படுவதற்கும் தகைமைகளை அடைந்து நளாந்தத் தொழில்களப் பெறறு அன்றாட வாழ்க்கைக்குத் தேவயான பொருட்களை கையாள்கின்ற தொழில்களில் இருந்தும் விலகியிருக்க வேண்டும். பிறருடைய ஆணைகளுக்குக் கட்டுப்பட்டுத் தொழில் செய்பவர்கள் மக்களாகமாட்டார்கள்.

சட்ட ஆட்சி என்பது இவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. போர் தவிர்க்க முடியாதது. இருபபினும் அதனைத தவிர்;த்தல் நன்று. இது ஏற்படுவதற்குக் பல காரணங்கள உள்ளன. போருக்குப் பின்னதாக உள்நாட்டில் புரட்சிகள் ஏற்படலாம். தொடர்நது இவற்றால் மாறுதல்கள் நாட்டில் ஏற்படலாம். புரட்சிகளுக்கும் பல காரணங்கள் இருப்பதாக அரிஸ்டோட்டில் குறிப்பிடுகின்றார்.

அரசியலமைப்பு என்ற வகயில் அரசாங்கத்தின் உறுப்புக்களான சட்டம் இயற்றுகின்ற பிரிவு, நிர்வாக பிரிவு நீதிமனறங்கள் போன்றவற்றினது எண்ணிக்கையும் அவற்றுக்கிடையிலான தொடர்புகளும் இயங்குகின்ற முறைகள் பற்றியும் அரசின் இறைமை அதிகாரங்கள் குவிந்திருக்கின்ற இடங்கள் பற்றியும் இவரால் கூறப்பட்டுள்ளது. இறைமை அதிகாரம் யாரிடத்திலிருக்கின்றது என்பதனை அடிப்படையாகக் கொண்டே அரசியலமைப் வகைப்படுத்தப்படுகினறது. இறைமை அதிகாரம் மக்களிடத்தில் காணப்படும்போது அந்நாட்டினது அரசு மக்களாட்சி எனப்படகின்றது. அரசாங்கத்தின் நோக்கம், இறைமை அதிகாரம் தங்கியிருக்கின்ற மக்களி;ன் டிதாகை என்பவைகளைப் பொறுத்தும் அரசியலமைப்புக்கள் பாகுபடுத்தப்படுகின்றன. எனவே அரசாங்கத்தினது நோக்கம் தூய்மையானது மற்றையது தூய்மையற்றதென அறிந்துகொள்வதற்கு இது ஒரு அளவு கொலாக அமைகின்றது. அரசு மக்களது வளர்ச்சினை அடிப்படையாகக் வைத்துச் செயற்பட்டால் அது தூய்மையான ஆட்சியெனவும் ஆட்சி செய்பவர்கள் தங்களது நலன்களை கருத்திற் கொண்டு செயற்பட்டால் தூய்மையற்றதாகவும் காணப்படும். இதனால் குறிக்கோளுக்குப் பொருந்துகின்ற வகையில் காணப்படுவது தூய்மையானதெனவும் அதனலிருந்தும் பிரிந்து நிற்பது தூய்மையற்றதெனவும் கொள்ளப்படுகின்றது.
அவர் அரசியலமைப்பின பின்வருமாறு வகைப்படுத்துகின்றார்

தூய அரசாங்கவகை                                             தூய்மையற்ற அரசாங்க வகை

முடியாட்சி                                                                       சர்வாதிகாரம்

உயர் குடியாட்சி                                                           செல்வச் சிறுகுடியாட்சி

மிதமான குடியாட்சி                                                   குடியாட்சி


வாழ்கின்ற சமுதாயத்தில் குறிப்பிட்ட நபர் ஏனையோரின் செல்வாக்குப் பெற்றவரா திகழ்கின்றபோது அக்குறிப்பிட்டநபர்  முடியாட்சியினை மேற்கொள்ள முடிகின்ற அதேநேரத்தில் அவர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் பதவிக்கு வந்தவராக இருத்தல் வேண்டும். சர்வதிகார ஆட்சி என்பது மக்களால் விரும்பப்படாத அதேநேரத்தில் அவ்வகையான ஆட்சியானது வன்மைமுறைகளை அடிப்படையாக கொண்டு காணப்படுகின்றது செல்வச்சிறுகுடியினர்களது ஆட்சியென்பது குடியாட்சியினைப் போண்றதே இருப்பினும் ஆட்சி செய்பவர்களது தெகைமற்றும் பொருளாதார காரணிகளே இவற்றினை வேறுபடுத்துகின்ற தன்மைகள் கொண்டதாக காணப்படுகின்றது. செல்வச்சிறுகுடியினரின் ஆட்சியில் ஆட்சியாளர்களின் எண்ணிக்கையில் குறைந்த இவர்கள் தொகையில் அதிகரித்த வறியவர்கள் மீது செல்வாக்கினை செலுத்துவார். அதாவது அரசாங்க அதிகார பகிர்வானது செல்வத்தினை ஆதாரமாகக் கொண்டு காணப்பட்டால்; செல்வச்சிறுகுடியினர்களது ஆட்சி ஆகும். குடியாட்சியில் வறியவர்களது செல்வாக்கானது பணம் வசதிகள் படைத்த வகுப்பினர்கள் மீது செல்வக்கினை ஏற்படுத்துகின்றது. மிதமானவகை குடியாட்சியல் அரசாங்க நிர்வாக இயந்திரமானது பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதிகாரப் பகிர்வுக் கோட்பானது பின்பற்றப்பட்டிருக்கும். அதாவது சட்டம் நீதி நிர்வாகம் போண்ற அதிகாரங்கள் பகிரப்பட்டிருக்கும். அலுவலர்கள் தேர்தல் அல்லது திருவுளச்சீட்டு முறையின் பிரகாரம் தேர்வு செய்யப்படுவார்கள்

அரிஸ்ரோட்டில் அரசியலமைப்புகளுக்கிடையில் காணப்படுகின்ற வேறுபாடுகளை சில விதிகளை அடிப்படையாகக்கொணடு விளக்குகின்றார். அவை முக்கியத்துவம் கொண் மூன்று பிரிவுகளாக் காணப்படுகின்றன. சட்டமனறம், நிர்வாக அதிகாரிகளது குழு, நீதிமன்றம் போன்றனவே அத்தகைய பிரிவுகளாகும. இவற்றினது செயற்பாடுகள் பொறுத்து நாடுகளின் அரசியலமைப்புக்கள் வேறுபடுவதாகக் குறிப்பிடுகின்றார். மிகச் சிறந்த அரசியலமைப்பு எது என்பதற்கு இவர் சமகாலத்தில் மக்களால் விரும்பப்படுகின்ற அரசு சில குறிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் சிறப்பாகப் பணியாற்றக்கூடிய அரசு எதுவென்றும் கருத்துக்களளை முன்வைத்துள்ளார்.

அதாவது தகுதியுடையவர் ஆட்சி செய்கின்ற போது முடியாட்சிதான் சிறந்தது. தகுதியும் திறமையும் கொண்ட சிலர் ஆட்சி செய்கின்றபோது உயர் குடியாட்சியே ஏற்றது. நடைமுறையில் தீவிரத்தன்மைகளை விடுத்து நடுவு நலைமையுடன் செயற்படக்கூடிய அரசே சிறப்பானது. ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வறியவரகளும் செல்வம் படைத்தவர்களும் இருக்கின்ற சந்தர்ப்பங்களில் அங்கே நிலையான அரசியலமைப்பு எவையும் செயற்படமுடியாது. இது இரு பகுதியினரின் ஆதரவினையும் பெறுவதென்பத மடியாத காரியம். அந்தவகையில் நடைமுறையில் இரு வகுப்பினரையும்விட நடுத்தர வகுப்பு எந்த அரசில் உறுதியாகக் காணப்படுகின்றதோ அது சிறந்த அரசாகக் காணப்படுவதுடன் அங்கு அமைதி, ஒழுக்கம் என்பனதொன்றுமெனவும் அரிஸ்டோட்டில் குறிப்பிடுகின்றார். இத்தகைய நிலைமை காணப்படாத அரசு மிதமான குடியாட்சியினக கொண்டிருக்கும். இதில் சுதந்திரமான கோட்பாடும் சொத்துடைமைக் கோட்பாடும் சேர்ந்தவகையில் காணப்படும். இதனையே இவர் சிறப்பான அரசியல் திட்டமாகக் கொள்ளுகின்றார்.

குறிப்பிட்ட ஒருவர் அரசியல் அதிகாரத்தினையோ அல்லது செல்வத்தினை வளர்ப்பதிலோ அக்கறையினைக் காட்டாமல் அவர் தனது திறமையினை வளர்த்துக் கொள்கின்ற வகையில் செயற்பட வேண்டும். வேலை போன்றன இலட்சிய அரசின் குறிக்கோள்கள அடைவதற்கு ஏறறதாகக் காணப்படுதல் வண்டும். அரசாங்கத்தின் கட்டுப்பாடடில் காணபபடக்கூடிய அளவு அரசே சனத்தொகையாக இருத்தல் வேண்டும்.

அரசாங்கமானது மக்களுக்கு கல்வயினை ஏற்படுத்தககூடிய ஆசிரியராக இருக் வேணடுமென்பதுடன் கட்டாயக் கல்வியானது அரசாங்கத்க்கு இன்றயமையாதது ன்கின்றார். ல்வியினை மக்களுக்கு சரானமுறையில் வழங்குவதே அசாங்கத்தின் கடமைகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது. உடற்பயிற்சி , இசைப்பயிற்சி வழங்கப்படுதல் வேண்டும். ம்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் அரசாங்கம் கண்காணித்தல் வேண்டும். அரசாங்கம இத்தகைய நடவடிக்கைகளக் மேற்கொள்கின்றபோது தான் மாணவர்கள் சிறந்த முறையில் வளர்வற்கான வாய்ப்புகள் அதிகமாகுமென்பது இவரது கருத்தாகும்.

அரசாங்கத்தினால் ஏற்படுகின்ற பயனகள் தொடரபாகவும் அரிஸ்டோட்டில் கருத்துக்களை முன்வைத்துள்ளார. இது தொடர்பாகத் தனது கருத்துக்களை முன்வைக்கின்றபோது அது சமுதாயத்தினைக் கட்டுப்படுத்துவதற்காகவே என்கிறார். அரசியல் வாழ்க்கைக்காகவே அவன் சேர்ந்து வாழ்கின்றான். அரசாங்கம் அரசியல் அமைப்புக்களிடையே வேறுபாடுடையது. அரசாங்கம் அரசின் முக்கிய அம்சமாகும்.

புரட்சிகள் நாடடில் ஏற்படுவதற்குப் பல காரணங்களைமுன்வைக்கின்றார். இருப்பினும் இத்தகைய புரட்சிகள் அமைதிக்கும் ஒழுக்கத்திற்கும் கேட்டினை வழங்கக்கூடிய வகையில் காணப்படுவதனால் அவற்றினைத் தவிர்ப்பது அரசாங்கத்தின் கடமைகளிலொன்றாகவும் கருதப்படுகின்றது. புரட்சிகளைத் தவிர்த்துக்கொள்வதென்பது எப்பொழுதும் நன்மை தருவதாகவே காணப்படும்.

தனியொரு மனிதனுடைய பண்பாக அரசு காணப்படுகின்றது. அரசு மனிதகுலத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பதில் சொல்ல வேண்டும். அரசினால்தான் மனிதனை வழிநடத்த முடியும். அது அவனுக்காக அர்ப்பணிப்பில் ஈடுபடுதல் வேண்டும்.

இன்றைய அளவுகோலின்படி நோக்கும் போது அரிஸ்டோட்டிலின சில கொள்கைகள் மிகவும் பிற்போக்கானவையாக இரக்கின்றன. எடுத்துக்காட்டாக, அடிமை முறையை அவர் ஆதரித்தார். அடிமைமுறை இயற்கை விதிக்கு உட்பட்டது என்றார். பெண்கள இயற்கையாகவே ஆண்களை விட தாழ்ந்தவரகள் என்று அவர் நம்பினார்.

கி.ம 323இல் அலெக்சாண்டரின் மரணத்தின் பின்னதாக மசிடோனியாவுக்கும் ஏதேன்சுக்கும் முரண்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கின. இந்நிலையில் மசிடோனிய அரசுடன் தொடர்புகள் வைத்திருந்த இவர் நாட்டினை விட்டு வெளீயேறவேண்டிய சூழ்நிலையேற்பட்டது. தப்பிச் சென்ற மறுவருடத்தில் சாலிக்ஸ் என்ற இடத்தில் மரணமடைந்தார். 400 நூல்களை இவர் எழதியதாகக் கூறபபடகின்றது. இவற்றில் nரு;பாலானவை அழிந்துவிட்டன. அவையும் வாழ்க்கையின் கடைசி 13 வருடங்களில் எழுதப்பட்டவையாகவே காணப்படுகின்றது. தன்னுடைய எழுத்துப் பணிகளை தொடர்ச்சியாக 50 வருடங்கள் மேற்கொண்டு கிரேக்க சிந்தனைகளுக்கு மெருங்கேற்றியவர். அந்தவகையில் இவருடைய சிந்தனைகள் பின்னாளில் சில விமர்சனங்களை உள்வாங்கிக் கொண்டபோதும் இவரைப்போன்று பரந்த சிந்தனைகள் கொண்டவர்கள் உலகத்தில் மிகவும் குறைவென்பதே உண்மை.
 














நவீன அரசியல் கோட்பாட்டின் ஸ்தாபகர் மக்கியவெல்லி .





    நிக்கலொ மக்கியவெல்லி எனச் சுருக்கமாக அறியப்படும் நிக்ககோலோ டி பர்னாடோ டெயி மாக்கியவல்லி (NICCOLO DI BERNARDO DEI MACHIAVELLIஒரு இத்தாலிய ராஜதந்திரியும் அரசியல் மெய்யியலாளரும், இசைக்கலைஞரும், கவிஞரும், நாடகாசிரியரும் ஆவார். மறுமலர்ச்சி  காலத்தின் மாபெரும் அரசியல் மற்றும் வரலாற்றுச் சிந்தனையாளர் நிக்கலோ மக்கியவெல்லி. இவர் தன்னுடைய அரசியல் அனுபவத்தினைக் கொண்டு எதிர்காலத்தேய அரசியல் விளைவுகளை சரியாக முன்கணிப்புச் செய்தார். இத்தாலிய ஆட்சியாளர்களிடையே சமரசம் பேசினார். மனிதர்கள் தினமும் எப்படி ஒழுகுகின்றார்கள் எக்பதனை உணர்ந்த கொள்ள விரும்பி அதனையே தன்னுடைய வாழ்க்கையின் குறிக்கோளாகவும் கொண்டு செயற்பட்டார். மனிதர்களது செயற்பாடுகள், அவற்றினது நோக்கங்கள், விளைவுகள் பற்றிய பல தகவல்களை பொறுமையொடு திரட்டி அய்வு செய்து கோட்பாடுகளை உரவாக்கினார். கடவுள் நம்பிக்கை எதுவுமற்ற பகுத்தறிவாளருக்கும் இவருக்குமிடையிலே எந்தவிதமான வேறுபாடுகளும் இருக்கவில்லை. மறுமலர்ச்சி காலத்தில் அவரைப்போன்று அவருக்கு முன்னால் புதுமையாக சீர்தித்தவரெவருமில்லையென்றெ கூறலாம்.

அரசியல் வரலாற்றினை எடுத்து நோக்குவோமேயானால் அரசியல் பற்றிய ஆய்வுகள் மிக முற்பட்ட காலத்திலிருந்தே இடம்பெற்று வருகின்றன. பல்வேறு காலப்பகுதிகளில் பல்வேறு அறிஞர்கள் தோற்றம் பெற்று தமது கருத்துக்களையும் கோட்பாடுகளையும் தெரிவித்து இருப்பதைக் எம்மால் அவதானிக்க முடியும். இவ்வகையிலே நவீனகால அரசியலின் தந்தை என வர்ணிக்கப்படும் மக்கியாவல்லி நவீன அரசியல் கோட்பாட்டின் ஸ்தாபகர் என்பதற்கான காரணங்களை நோக்குவோம்.

இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற புளோரன்ஸ் நகரத்தில் கி.பி 1469 மே 1இல் மக்கியாவல்லி பிறந்தார். அவர் தந்தை பெர்னான்டோ மக்கியவெல்லி வழக்கறிஞர் தொழில் பார்த்து வந்தார். தாயார் பர்த்தோலாம்மியா டி ஸ்டீபனோ நெல்லி.  இருவரும் புளொரன்ஸ் நகரின் பிரபுக்கள் குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள். ஆரம்பம் முதலாகவே கல்வியில் ஆர்சம் கொண்ட இளைஞராக காணப்பட்டார். அரசாங்கத்தில் சிறிய தொழிலில் சேர்ந்து இவர் படிப்படியாக தனத திறமையின் மூலமாக அமைச்சகப் பதவிpயினைப் பெற்றுக்கொண்டார். அரசுக்கு ஆலோசனை கூறுவதில் மக்கியவெல்லியின் பங்கு அக்காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருந்தது.

இவர் அரசில் உயர்பதவியில் இருந்தமையின் பின்னணியில் உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள, இராணுவத் தலைவர்கள் மற்றும் சமகால பிற உலகத் தலைவர்கள், அதிகாரிகள், மதகுருமார்கள் போன்றவர்களுடன் நெருக்கமாகப் பழகக்கூடிய சந்தர்ப்பம் இவருக்கு ஏற்பட்டதனால் அவர்களிடமிருந்து மக்கியவெல்லி பல்வேறு அனுபவங்களினை உள்வாங்கிக்கொண்டார். குறிப்பாக சமகாலத்துப் பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி போன்ற நாடுகளின் மன்னர்களோடும் தொடர்பு வைத்திருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது. பிரான்சிய மன்னன் 12ஆம் லூயியுடன் இரகசியப் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காகவும் அனுப்பி வைக்கப்பட்டார். 1503இல் போப்பினைத் தெரிவு செய்வதற்கு நடைபெற்ற தேர்தலை நேரடியாகக் கவனிப்பதற்கு உரோமபுரிக்கு மக்கியவெல்லி அனுப்பப்பட்டார். தொடர்ந்து புதிய போப்பாண்டவரின் தூதுவராக நியமிக்கப்பட்டார் இருப்பினும் மெடசி குடும்பமானது மீண்டும் புளோரன்சின் அரியணைக்கு வந்ததும் 1512 நவம்பர் 7இல் மக்கியவெல்லி வேலைநீக்கஞ் செய்யப்பட்டார். அவ்வம்சத்தினரால் சிறைவைக்கப்பட்ட இவர் விடுதலையடைந்ததும் காஸ்யானோ என்ற இடத்திற்குச் சென்று அங்கு தன்னுடைய வாழ்க்கையினைத் தொடர்ந்தார். இக்காலக்கட்டத்திலிருந்துதான் மக்கியாவல்லியின் எழுத்துப்பணி ஆரம்பித்தத எனலாம். தம்வாழ்வின் பெரும் பாகத்தை தனது நாட்டுப்புற பண்ணையில் தான் கழித்தார். அப்போது தான் புகழ் பெற்ற நூலாகிய “இளவரசன்” எனும் நூலை எழுதினார். இளவரசன் மற்றும் லிவி மீதான உரைக்கோவை ஆகிய இரு நூல்களும் மக்கியாவல்லியின் இரு முண்னணி புத்தகங்களாகும்.

           இடைக்காலத்தின் இறுதியளவில் இத்தாலியினது அமைப்பு 5 பெரும் பிரிவுகளால் ஆளப்படலாயிற்று. வெனிஸ், புளோரன்ஸ், நேப்பிள்ஸ், மிலான், உரோமன் தேவாலயம் போன்ற பிரிவுகளே அவை. மேலும் இவற்றுக்கிடையிலே ஒற்றுமையும் காணப்பட்டது. இக்காலப்பகுதியில் போப்பின் நடவடிக்கைகளே இத்தாலியினது ஒற்றுமையின்மையினைக் குறைத்து வந்தமை நோக்கத்தக்கது.

தன்னுடைய செல்வாக்கு குறைந்துவிடப்போகின்றதென்ற அச்சத்தின் காரணத்தினால் போப் நாட்டில் இத்தகைய ஒற்றுமையின்மையை ஆதரித்து வந்தார். அரசருக்கும் போப்பிற்குமிடையிலான போராட்டங்களும் நாட்டினது அமைதியின்மையினைக் குறைத்து வந்தது. ஆட்சியாளர்களும் ஜனநாயகத்தினை மதிக்கவில்லை. அரசியற் கொலைகள், கடத்தல்கள் என்பன சர்வசாதாரணமாக அங்கு நடந்த வந்தன. அந்தவகையில் இத்தாலியினது குழப்பமான அரசியல் நிலையில் அதனைக் குழப்பமற்ற நாடாக்க வேண்டுமென்ற முயற்சியில் முக்கியத்துவம் பெற்றவர் மக்கியவெல்லி.

அரசியல் நிலைப்பாட்டினை வரலாற்று ரீதியாக அறிய வேண்டுமென்று எண்ணினாரே தவிர பிற விடயங்களில் அவர் தலையிடவில்லை. தமது கால அரசியலில் தீவிரமான அக்கறையினைச் செலுத்தினார். தன்னுடைய கருத்துக்களை நிரூபிப்பதற்கு அவர் வரலாற்றுக் காரணங்களினை ஆராய்ந்தார். அரசியல் தத்துவத்தினை விட நடைமுறை அரசியலில் ஆர்வங்காட்டினார். அரசாங்கம் இயங்கும் முறை அதனை இயக்ககின்ற சக்தி போன்றவற்றில் அக்கறை காட்டினார். தனிப்பட்ட நபர்களுக்காக மட்டுமன்றி சகலருக்கும் பயன்படுகின்ற வகையில் அரசு பணியாற்ற வேண்டுமென்று எண்ணினார். 

வலிமை அதிகரிக்க வேண்டுமாயின் அரசன் கருணை காட்டுதல் கூடாதெனப் போதித்தார். முன்னர் குறிப்பிட்டது போன்று மக்கியவல்லிக்கு முன்னதாக இவரைப் போன்று புதுமையான சிந்தனைகளை அரசியலில் மேற்கொண்டவர்கள் எவருமில்லை எனக் கூறலாம். உலக விடயங்களில் தெய்வத்தின் தலையீடு சிறிதும் இல்லையென்பதே இவரது வாதமாகும். அரசியலையும் சமயத்தையும் பிரித்த பெருமைக்குரியவர் மக்கியவெல்லி. அரசினை மனிதனுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்ற கருவியாகவே இவர் கருதினார். மதத்தலைவர்களது அறிவுரை தேவைப்படுகின்ற சமயத்தில் மட்டும் அதனைப் பெற முடியும். இதனால் நடைமுறை அரசியல் பொறுத்து மதமானது எந்தவிதமான பங்கினையும் வழங்கவில்லை. அந்தவகையில் மதத்தினுடைய தலையீடு அரசியலில் தேவையற்றதென்பது இவருடைய கருத்து. இத்தாலியின் ஐக்கியத்தினை எதிர்பார்த்து நின்ற மக்கியவெல்லி அதன் பொருட்டுப் போப் பாண்டவரினை எதிர்த்து நின்றார். இதற்காக எந்தவிதமான குறுக்கு வழிகளையும் இராஜதந்திரத்தினையும் கூடப் பயன்படுத்துவதற்கு விரும்பியிருந்தார். மேலும் அரசியல் கலையானது மனிதனுடைய சுயநலமே. அத்துடன் நாகரிகத்தினடிப்படையில் கற்றுக்கொள்வதன்று என்பதனைத் தன்னுடைய நீண்ட நாளைய அனுபவத்தின் மூலமாக அறிந்த கொண்டார். பொருளாதார சிறப்பே அரசியலுக்கு அடிப்படையெனவும் ஏற்றுக் கொண்டார்.

செல்வமானது நாட்டு மக்களிடையே எவ்வாறு பகிரப்பட்ட காணப்படுகின்றதோ அதனடிப்படையிலே தான் ஆட்சி செய்கின்ற அதிகாரங்களும் அமைந்திருப்பதாகக் கண்டறிந்தார். சூழ்நிலைகளின் தன்மைகளுக்கு ஏற்றவகையில் அரசியலமைப்புகள் காணப்படுவது சிறப்பானதென மக்கியாவல்லி கருதினார். ஸ்பர்ட்டா, வெனிஸ், உரோம் ஆகியவற்றினுடைய குடியரசு முறையிலான அரசாங்கத்தினைப் பாராட்டினார். செல்வந்தர்களது ஆட்சியினை ஆதரிக்கவில்லை. சிறப்புடைய ஆட்சியென கலப்பாட்சியைக் கருதினார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தன்னுடைய காலத்தில் இருந்திருப்பாரெயானால் அரசும் மக்களும் மிகவும் ஒற்றுமையுடன் இருந்திருப்பர் எனக் கூறுகிறார்.

 இவருடைய  இளவரசன்  என்ற நூலில் அரசன் எவ்வாறு இருக்க வேண்டும்.    எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதனை அதில் எடுத்துக் கூறுகிறார். அரசனானவன் தன்னுடைய பதவியினைக் காத்துக் கொள்கின்ற அதேவேளை எதிரிகளை அவன் அடக்குதல் வேண்டும். புரட்சிகள் நாட்டில் ஏற்படாத வண்ணம் அவன் நாட்டினைக் காத்திடுதல் வேண்டும். அவன் எதிரிகளை தோற்கடிக்க எண்ணுகின்ற போது அதனை அவன் பகிரங்கமான காரணங்களோடு சரியான வழியில் மேற்கொள்ளுதல் அவசியம். மக்களுடைய சொத்துக்களில் கைவைத்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.

அரசன் கொடியவன் என்ற பெயர் தனக்கு கிடைத்துவிடுமோ என அவன் ஒரு போதும் அஞ்சக்கூடாது. கடுமையான போக்குடன் கொடூரத்தன்மையும் அவனுக்கிருத்தல் வேண்டும். நாடு விரிவுபடுத்தப்படுவதனை ஆதரித்தார். அரசனது அதிகார எல்லையினை அதிகரிப்பது தொடர்பான விடயங்களே இவரது நூலில் காணப்படுகின்றது. அரசு தன்னுடைய எல்லைகளைப் பெருக்;க வேண்டும் அல்லது அழிந்துவிடவேண்டுமென்பது இவருடைய எண்ணமாகும். உரோமின் கொள்கையினை இவர் பாராட்டினார். தந்திரமும் அறிவுடைமையும் அரசியலுக்கும் இன்றியமையாதன என்பது மக்கியவெல்லியினுடைய வாதமாகும்.

டான்ரே போலவே இவரும் தேசபக்தி கொண்டவராக காணப்பட்டார். ஜேர்மன் மற்றும் சுவிஸ் நாடுகளது அரசியலமைப்புக்களைப் பாராட்டினார். திறமையான நிர்வாகியாகவும் அரசியல் நிர்வாகியாகவும் இராஜதந்;திரியாகவும் விளங்கினார்.

இவருடைய மக்களால் அரசன் விரும்பப்படுவதை விட அவனைக் கண்டு மக்கள் பயப்பட வேண்டுமென்ற கொள்கை சிறப்பானது. இவ்வாறு இவர் கருதியமைக்கு முக்கியமான காரணம் அவர்கள் நன்றி கெட்டவர்கள் என்ற எண்ணம் மக்கள் பற்றி அவர் மனதில் காணப்பட்டதே. மக்கள் சுயநல நோக்குடையவர்கள். சபல புத்திக்காரரர்கள் நன்றி மறந்தவர்கள். இவர்களைக் கட்டுப்படுத்திவிட்டால் அவர்கள் அரசருக்காக உயிரையும் கொடுப்பர.; அதே நேரத்தில் அரசன் அவர்களுடன் பழகும் போது அவர்கள் அரசரை அழித்துவிடவும் தயங்கமாட்டார்கள். சமகாலத்தில் இவர் இத்தகைய நிலையினைக் கருத்திற் கொண்டு இக்கருத்தினைக் குறிப்பிட்டிருந்தாலும் கூட அக்கருத்தஸ்ரீதுக்கள் இக்காலத்திற்கும் பொருந்துவனவாக உள்ளன. ஒன்றினை ஆராய்ந்து அதனை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டுமென்பது மக்கியாவல்லியினது குறிக்கோள்.

 சமகாலத்தில் இத்தாலியில் குடியரசு வீழ்ச்சி கண்டதன் பின்னர் சர்வாதிகார அட்சி ஏற்பட்டமையினைக் கருத்தில் கொண்டுதான் மக்கியவல்லி குடியரசு நடைமுறைக்கு ஏற்றதன்று எனக் கூறுகின்றார். அரசனுக்குப் பல்வேறு ஆலோசனைகளை இளவரசனில் இவர் குறிப்பிடுகின்றார். அரசன் தான் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் அரசனே நேரடியாகச் சென்று சில காலத்திற்காவது சட்டம் ஒழுங்கினை மேற்பார்வை செய்து கொள்ளுதல் வேண்டும்.  கைப்பற்றப்பட்ட பகுதிகளில் ஜனநாயக முறைப்படியான ஆட்சியினை இவர் ஆதரிக்கவில்லை. மாறாக அப்பகுதிகள் சில காலத்துக்கு மோசமான ஆட்சியாளர்களது பொறுப்பில்விட வேண்டுமெனவும் அவ்வாறு விடப்படும்போது தான் அங்கே மிகக்குறுகிய காலத்தில் சட்டம், ஒழுங்கு போன்றன நிலை நாட்டப்படமெனக் கூறுகிறார். இருப்பினும் நாட்டில் சுமுகமான நிலை ஏற்பட்டவுடன் அத்தகைய கொடுங்கோலாச்சியாளர்களை அகற்றி விடவேண்டும். இது மக்கள் பொறுத்து அச்ச உணர்வினை ஏற்படுத்தும். ஏதேசச்சதிகாரிகளால் ஆட்சி செய்வது என்பது ஒர் முறையாகவும் ஜனநாயகமுறைப்படியும் மக்களுக்காக ஆட்சி செய்வதென்பதும் மற்றொரு வழியாகும்.

பழமையான அரசுகளுக்கும் புதிய அரசுகளுக்கும் அவற்றுக்கு முக்கியமான அடிப்படைகளாக விளங்குபவை சிறந்த சட்டங்களும் அரசனது படைகளுமே. அரசில் சிறந்த படைபலம் காணப்படாத நிலையில் நல்ல சட்டங்கள் இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை. இதனால் எங்கு படைபலம் சிறந்த முறையில் காணப்படுகின்றதோ அந்த நாட்டில் நல்ல சட்டங்கள் காணப்படும்.

சமயத்தின் பின்னணியில் இயங்குகின்ற அரசுகள் எப்போதும் நிலைத்திருக்கமாட்டா. சிறந்த அரசுகள் உறுதித்தன்மை அற்றவை. இறுதியில் இவை சர்வாதிகாரிகளிடம் சென்று விடும். மதச்சார்பான அரசுகளின் குறைபாடுகள் பலவற்றினை விபரிக்கின்றார். ஒற்றுமையின்மை , பேராசை. நன்நடத்தைகள் கட்டுப்பாடுகள் இருக்கமாட்டாது போன்ற இயல்புகள் அவை கொண்டிருக்கும். கடவளிடம் பயமோ பக்தியோ இருக்கமாட்டாது. பலம் வாய்ந்த படைகளைக் கொண்டிருக்க மாட்டாது. அரசன் வேட்டைக்குச் செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தையும் மக்கியாவல்லி வலியுறுத்தினார். அரசன் ஓய்வு காலங்களில் அவன் வேட்டைக்குச் செல்லும் போது தான் அவனால் தன்னுடைய எல்லைகளின் அளவினைக் அறிந்துக் கொள்ள முடிவதுடன் அவனால் சிறப்பாகவும் இயங்க முடியாது.

நாடுகள் இரண்டு சமபலமான நிலையில் மோதுகின்ற போது அரசன் எந்த நாடு வெற்றி வாய்ப்பினைப் பெறுகின்றதென அறிந்துகொண்டு அவற்றுடன் சேர்ந்து கொள்ளுதல் வேண்டும். மேலும் இளவரசன் எனும் நூலில் 17, 23, 24 போன்ற அத்தியாயங்களில் அரசனது கடமைகள் ஆட்சி செய்யும் முறைகளை விவரிக்கின்றன.

இவரது இளவரசன் எனும் நூலின் கருத்துக்களை நோக்கும் போது இவரும் ஏனைய அரசியல் சிந்தனையாளர்களைப் போலவே சூழ்நிலையின் தாக்கத்தற்கு உட்பட்டவராகவே காணப்படுவதை அவதானிக்கலாம். ஏனெனில் இவரின் கருத்துக்களில் முக்கிய இடம்பெற்றது அரசே ஆகும். இவர் ஒழுக்கம், மதம், கலாசாரம் என்பவற்றின முக்கியப்படுத்தவில்லை. அதிகாரத்தின் மூலமே அரசாட்சி செய்யலாம் என்பதை வலியுறுதிதுகின்றார். எனவே தான் இவர் தனது ஆய்வின்போது கிரேக்க உரோம கால பகுதியிலிருந்து சில மூலங்களை எடுத்துக் கொண்ட போதும் மத்திய கால சிந்தனைகளை அறவே நிராகரிக்கின்றார். பிரான்ஸ் நாட்டு மக்களை இவர் மதிக்காத போதும் அந்நாட்டு நிர்வாகமுறையினை விரும்பினார். ஜேர்மன் நாட்டினையும் விரும்பினார். காரணம் அந்நாடுகளில் காணப்படுகின்ற ஒற்றுமையே.

மேலும் இளவரசன் எனும் நூலினது கடைசி பகுதி இத்தாலியினைக் காட்டமிராண்டிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டுமென்று கூறப்படுகின்றது. அவரது இளவரசன் என்ற நூலானது மதம், பொருளாதாரம் போன்ற சில விடயங்கள் தொடர்பாக அலட்டிக் கொள்ளவில்லை.

மக்கியாவல்லியின் டிஸ்கோர்ஸி என்ற நூலானது இளவரசன் பெற்றிருந்த முக்கியத்துவத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை. அதேநேரத்தில் அரசியல் துறை சார்ந்தவர்களுக்கு இவரது கருத்துக்கள் வழிகாட்டியாக உள்ளதோடு நவீன அரசியல் கோட்பாட்டின் ஸ்தாபகராகவும் காணப்படுகின்றார. மக்கியாவல்லி நவீன அரசியலின் ஸ்தாபகர் என்ற கருத்தை ஏற்பவர்கள் அதற்கான காரணங்களைக்’ குறிப்பிடுகின்றனர். அதாவது மக்கியாவல்லியே முதன்முதலில் யதார்த்த பூர்வமான அரசியல் பற்றி சிந்தித்த ஒரு அறிஞர் என்றும், மத்திய கால சிந்தனையின் முடிவையும் நவீனகால சிந்தனையின் ஆரம்பத்தையும் இணைப்பவர் என்றும் தெய்வீக உரிமைக்கோட்பாடு, இயற்கைச் சட்டங்கள் போன்றவற்றினை முதன்முதலாக துணிவுடன் நிராகரித்து அரசியலுக்கும் மதத்திற்கும் இடையில் உறுதியான பிரிகோட்டை வரைய முற்பட்டவர் என்றும் கூறி இவரின் கருத்துக்களை ஏற்கின்றனர்.
இக்காரணங்களை மட்டுமன்றி அதிகார அரசியல் பற்றி கூறிய முதல்வர் என்றும் ராஜதந்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு சர்வதேச ரீதியில் நோக்கிய அறிஞர் என்றும் மக்கியாவல்லியினை மேன்மைப்படுத்தி அவரின் கருத்துக்களை ஏற்கின்றனர்.

இவ்வாறு இவரது அரசு பற்றிய கருத்துக்களின் மூலம் இவர் தற்கால அரசியல் சிந்தனையின் ஸ்தாபகர் என்பதற்கான காரணங்களை விளக்கினாலும்  நடைமுறை அரசியல் பற்றி ஆராய்வதிலே அதிகார அரசியலுக்கு முக்கிய இடத்தினைக் கொடுப்பதனால் தான் இவரை நவீன அரசியலின் தந்தை என கூறுவதை சிலர் நிராகரிக்கின்றார்கள். அவர்கள் மக்கியாவல்லியை “அதிகார அரசியலின் தந்தை” என கூறுவதே சாலச்சிறந்தது என தெரிவிக்கின்றனர்.

        அவருடைய கொள்கைகள் பல பிற்கால அரசியல் வல்லுனர்கள் பலரால் விமர்ச்சிக்கப்பட்டன. அரசியல் ஒன்று தான் நாட்டினைக் காக்குமென்று இவருடைய கருத்தாகும் இவருடைய அரசியல் அனுபவத்திற்குப் பொருத்தமற்றதாகக் காணப்படுகின்றது. மக்களை நன்றியற்றவர்களெனக் குறிப்பிடுகின்றார். அரசியல் அறிவில்லாத மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிக்கொணடிருக்க வேண்டும். அவர்களது மனத்தினை மாற்றுவதற்கு இதனை அவர்களது நாட்டினதும் நன்மை பொறுத்தே செய்தல் வேண்டும். மக்கள் ஆபத்தானர்கள். அதேநேரத்தில் அவர்களது மனம் பக்குவப்படாமல் காணப்படுகின்றது. தலைவனற்ற கூட்டம் ஆபத்தானது. ஏமாற்றமும் பலாத்காரமும் மக்களை ஆட்சி செய்வதற்கு சிறந்த வழிகாட்டியாக கொள்ளுகிறார். ஏமாற்றுதல் என்பது மக்கியாவல்லி கைக்கண்ட யுக்தியாகும். அதாவது நாடு ஆபத்தில் காணப்படுகின்றபோது நியாயம், அநியாயம் பார்ப்பது பயனற்றது என்பது இவரது வாதமாகும். அத்துடன் ஆட்சிக்கலை என்பது மக்கியாவல்லி எடுத்தியம்பியவற்றில் குறிப்பிடத்தகுந்த மற்றும் சர்ச்சைக்குரிய பங்களிப்பாகும்.

மக்கியாவல்லியினுடைய நூல்கள் குடியரசுக் கொள்கையையினை வெளிப்படுப்படுத்தினாலும் இக்கொள்கையினைத் தெளிவாகவும் விளக்கமாகவும் அவற்றில் அவர் எடுத்துக்காட்டவில்லை. மதம் சம்பந்தமான கருத்துக்கள் எவற்றினையும் இவர் குறிப்பிடவில்லை. இத்தாலியின் அரசியல் நிலையினை மட்டுமே இவை வெளிப்படுத்துகின்றன. மக்கியாவல்லியின் சிந்தனைகள் தொடர்ச்சியாக சொல்லப்படாமல் சிதறிக் காணப்படுகின்றன. மீண்டும் மீண்டும் ஒரே கருத்தினை பல இடங்களில் குறிப்பிடுகின்றார். மக்கியவெல்லி நயவஞ்சக அரசியல் தத்துவஞானியாகக் கருதப்படுகின்றார். சர்வதேச அரசியலும் உள்நாட்ட அரசியலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தனியார் நீதி ஒழக்கம், பொதுநீதி ஒழுக்கம் போன்ற பிரிவுகளை அக்காலத்திலேயே தெரிவித்தவர். இவர் பற்றிப் பலரிடையே தவறான கருத்துக்கள் காணப்பட்டபோதும் உண்மையில் அவரை குறுகிய எண்ணங்கொண்ட சுயநலமிக்கவர் எனக் கூறிக் கொள்வது எந்தளவுக்குப் பொருத்தமானதென்பது வினாவுக்குரியதே.

மக்கியாவல்லி தனது அதிகார அரசினைப் பற்றி வரைவிலக்கணப்படுத்தும் போது ஒரு தனியார் மூலமோ அன்றி வழிவழியாக பல நபர்கள் மூலமோ ஏற்படுகின்ற அரச அதிகாரத்தின் முக்கிய பண்புகளாக தலைமை தாங்கி நடாத்தும் வீரம், ஒற்றுமையை நிலைநாட்டவல்ல மனோசக்தி, நினைத்ததை செய்யும் துணிச்சல் ஈவு இரக்கமற்ற தண்டணை என்பனவெ மக்கிய அம்சங்களாக இருக்கவேண்டும் என கூறுகிறார்.
மேலும் இந்த அரசை ஆள்பவனுக்கு சில சிறந்த பண்புகள் இருக்க வேண்டும் என்கிறார். அதாவது ஆள்;பவன் சிங்கம் போன்ற வீரமுள்ளவனாகவும் நரிபோலத் தந்திரமுள்ளவனாகவும் காணப்படவேண்டும் என வலியுறுத்தும் இவர் பொதுமக்களின் உளவியல் தன்மையினை மிகக்கீழ்த்தரமானதாகவே வர்ணிக்கிறார்.

அதுமட்டுமன்றி மக்கியாவல்லியின் கருத்துக்கள் மனிதப்பண்புகளற்ற கருத்துக்கள் என்றும் பாசிச கொள்கைக்கு வித்திட்டவர் என்றும் இவரின் கருத்துக்கள் அரசியல் வரலாற்றிலே துர்அதிஸ்டவசமாக ஏற்பட்டவை என்றும் இவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டமையால்தான் இவ்வாறான அராஜக கருத்துக்களை தெரிவித்தார் என்றும் இலக்குகளைப் பற்றி அக்கறைப்படவில்லை என்றும், இன்னொரன்ன காரணங்களை தெரிவித்த இவரின் கருத்துக்கள் அரசியலில் இருந்து முற்றுமுழுதாக நீக்கப்படவேண்டும் எனவாதிடுகின்றனர்.

மக்கியாவல்லியின் கருத்துக்கள் அரசியல் வரலாற்றிலே சர்ச்சைக்குரிய கருத்துக்களாகும். இவரின் கருத்துக்களை சிலர் ஏற்கின்றார்கள். பலர் நிராகரிக்கின்றார்கள். ஏற்பதும், நிராகரிப்பதும் அவரவர் மனநிலையினைப் பொறுத்த விடயமாகும்.

எது எப்படியாயினும் இவருடைய அரசியற் கண்ணேட்டம், மனித இயல்பு தொடர்பான கருத்துக்கள் , நாட்டுப்பற்று, சார்புடைமை, திறனாய்வின்மை போன்றனவும் குறைபாடுகளாகச் சொல்லப்பட்டாலும் அரசியலைச் சமயத்திலிருந்து பிரிக்க எடுத்த முயற்சியும் இளரசன் அரசியல் தத்துவதற்கும் எடுத்துக் காட்டுகளாக அமைகின்றன. அன்றைய இத்தாலியின் இயல்பான பிரதிபலிப்பாக இவரைக் கருதலாம். அதுமட்டுமன்றி மக்கியாவல்லி அரசியல் வரலாற்றிலே புதிய திருப்பத்தினை ஏற்படுத்தியவர் என்பதை யாராலும் மறுக்க மடியாது. அதுமட்டுமன்றி அவர் தன்னம்பிக்கை மிகுந்தவர் என்பதை அவரின் கருத்துக்களிலிருந்து அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஏனெனில் ஏனையவர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் மனம் தளராமல் தனத சொந்தக் கருத்துக்களை துணிவுடன் வெளியிட்டமையால் இவர் ஒரு தன்னப்பிக்கை உடைய அரசியல் அறிஞர் என்றும் நவீன அரசியல் சிந்தனையின் ஸ்தாபகர் என்றும் எமக்கு காட்டிநிற்கின்றது.

1800 – 2000 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கைப் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்திய காரணிகள்

இலங்கையின் பொருளாதாரத்தினை பொதுவாக அபிருத்தியடைந்து வரும் அல்லது குறைவிருத்திப் பொருளாதாரம் என வரையறை செய்வது மரபாகும். அத்துடன் இலங்கையின் ...