Friday 5 March 2021

1800 – 2000 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கைப் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்திய காரணிகள்


இலங்கையின் பொருளாதாரத்தினை பொதுவாக அபிருத்தியடைந்து வரும் அல்லது குறைவிருத்திப் பொருளாதாரம் என வரையறை செய்வது மரபாகும். அத்துடன் இலங்கையின் பொருளாதார அமைப்பானது ஏனைய அபிவிரத்தியடைந்த வரும் நாடுகளின் பொருளாதாரத்தினைப் போன்று இரட்டைத்தன்மை வாய்ந்தது எனப் பல பொருளியலாளர்களாலும் வரையறை செய்யப்பட்டுள்ளது. இரட்டைப் பொருளாதாரம் எனும்போது தொழில்நுட்பம், மூலவளங்களின் பயன்பாடு, நாணயமயம் ஆகியவற்றினைப் பொறுத்தமட்டில் அடிப்படையான வேறுபாடுகளைக் கொண்ட இருபெரும் துறைகளைக் கொண்ட அமைப்பினைக் குறிப்பதாகும். இதில் நவீன துறையானது பெருந்தோட்டம், வர்த்தகம், நிதி, போக்குவரத்து, பொதுத் தொடர்புகள் போன்ற ஏனைய சேவைகளையும் கொண்ட அரசாங்கள தனியார் துறைகளை உள்ளடக்கியதாகும் என வரையறை செய்யப்படுகின்றது. 

வேறு சில மேற்கத்தேய பொருளியலாளர்கள் இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் முத்தன்மைப் பொருளாதார அமைப்பினைக் கொண்டதென வாதிடுகின்றனர். இந்த முத்தன்மையானது நகர்ப் பொருளாதாரம், பெருந்தோட்ட பொருளாதாரம், கிராமிய பொருளாதாரம் என வகைப்படுத்தப்படுகின்றது. நகர்ப்பொருளாதாரம் எனும்போது வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், அரசாங்க காரியாலயங்கள் ஆகியவற்றினை அதிகளவில் கொண்ட நவீன பணப்பொருளாதாரத்தினை குறிப்பதாகும். பெருந்தோட்டப் பொருளாதாரம் ஏற்றுமதி விவசாயத் துறையினையும், கிராமிய பொருளாதாரம் மரபு ரீதியான விவசாயத்துறையினையும் பெருமளவு உள்ளடக்கியதாகவிருக்கும். அந்தவகையில் 1800 – 2000 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கைப் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்திய காரணிகளைச நோக்குவோம்.

இலங்கையில் நவீன பொருளாதாரத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பெருந்தொட்ட விவசாயத்துடன் தோன்றி வளர்ந்ததொன்றாகவேயுள்ளது. மானிய சமுதாயத்தின் சிதைவு, வங்கி நாணயமறை, வீதிப்போக்குவரத்து, வர்த்தக ஸ்தாபனங்கள் ஆகியவற்றின் தோற்றம், மத்திய வகுப்பினரது வளர்ச்சி என்பன பெருந்தொட்ட விவசாயத்தின் பின்பே ஏற்பட்டதெனலாம். ஆரம்பகாலத்தில் போர்த்துக்கேயரைப் போலவே ஒல்லாந்தரும் வர்த்தகப் பயிர்களைச் செய்கை பண்ணும் கொள்கையை மேற்கொள்ளவில்லை. காடுகளில் இயற்கையாக விளைந்த கறுவாவை தோட்டங்களில் பயிரிட ஆரம்பித்தவர்கள் ஒல்லாந்தரே ஆவர். ஆரம்பத்தில் கறுவாவும் பின்னர் கோப்பி, மிளகு, என்பனவற்றையும் பயிரிடத் தொடங்கினர். இன்றைய கொழும்பு, கறுவாத்தோட்டம், கதிரான, எவரிவத்த போன்ற பிரதேசங்களில் ஒல்லாந்தரால் கறுவாச்செய்கை ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறு ஒல்லாந்தரால் முதன் முறையாக இலங்கையில் பெருந்தொட்டப் பயிர்ச்செய்கைக்கான அத்திவாரம் இடப்பட்டது. 

பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் இடையில் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அவ்வுடன்படிக்கை முடிவெய்த அடுத்த ஆண்டில் அரசாங்கமே கறுவா வியாபாரத்ததில் ஏகபோக உரிமை கொண்டிருந்தது. ஆனால் 1833க்கு பின்னர் கறுவாவுக்கு உலகத்தில் இருந்த மதிப்பு மெல்ல மெல்லவாகக் குறைந்து வந்தது. இலங்கைக் கறுவாவின் விலை மிகக் கூடுதலாக இருந்தமையாகும். 

இலங்கையின் பொருளாதாரம் ஆரம்பத்தில் சுயதேவை பொருளாதாரமாகவே காணப்பட்டது. ஆனால் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கோல்புறூக் கமரன் சீர்த்திருத்தின் விளைவாக இலங்கையில் பெரு;தோட்டப் பொருளாதாரம் பரவ ஆரம்பித்தது. அந்தவகையில் கோல்புறூக் கமரன் சீர்திருத்தமம் இலங்கை பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்திய முக்கிய காரணியாகும். கோல்புறூக் கமரன் சீர்திருத்தின் பொருளாதார மாற்றங்களாவன:

ஐரோப்பியர் இந்த நாட்டில் தங்கியிருப்பதற்கும் நிலத்தை உடைமையாக்கிக் கொள்வதற்கும் இருந்த உரிமைகள் இல்லாமலாக்கப்பட்டது.

உள்நாட்டு வெளிநாட்டு முயற்சியாளர்களுக்கு தேவையான மட்டும் நிலத்தை உடைமையாக்கிக் கொள்வதற்கு ஒரு கொள்கையை நடைமுறைப்படுத்தல்

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்த நாட்டில் தங்கியிருப்பதற்கும், முதலீட்டை மேற்கொள்வதை ஊக்குவிப்பதற்கும் தாராண்மை வாத ஆட்சி முறை உருவாக்க சட்டவாக்க சட்டநிர்வாக கழகம் உருவாக்குவதனை கோல்புறூக் குழுவினர் முன் வைத்தனர்.

ஊழியர்களை பெற்றுக் கொள்வதற்காக கட்டாய இராஜகாரிய முறை இல்லாது ஒழித்தல்.

•      தனியார் முதலீடுகள் ஊக்குவிக்கப்பட்ல்

•      அரசாங்கம் வர்த்தகத்தில் செலுத்தி வந்த ஏகபோக உரிமை நீக்கப்பட்டது.

• முதலீட்டாளர்களுக்கு தடையாக காணப்பட்ட வரி முறைகள் மறு சீரமைக்கப்பட்டது. 

மேற்கூறப்பட்ட சிபாரிகள் கோல்புறூக் குழுவினரால் முன்வைக்கப்பட்து. அவை நடைமுறைப்படுத்தப்பட்ட வேளை இலங்கையில் பெருந்தோட்டத்துறை பொருளாதாரம் விருத்தியடைய செல்வாக்கு செலுத்திய ஓர் காரணியாகும்.

இலங்கையில் 1830ஆம் ஆண்டிற்குப் பின்பு குடியானவனின் பயிராகப் பயிரிடப்பட்ட கோப்பி ஐரோப்பிய முயற்சியாளரினால் வர்த்தக அடிப்படையில் பயிரிடப்பட்டதைத் தொடர்ந்தே பெருந்தோட்ட விவசாயத்தின் வரலாறு ஆரம்பமானது எனலாம். 1870க்குப் பின்பு, கோப்பியின் வீழ்ச்சிக்குப் பின்பு முதலில் தேயிலையம் பின்பு றப்பர், தென்னை ஆகிய பயிர்களும் டிபருமளவில் பெருந்தோட்ட அடிப்படையில் பயிரிடப்பட்டதைத் தொடர்ந்து, பரந்த அடிப்படையில், இலங்கையில் பெருந்தோட்ட விவசாயமானது வளர்ச்சியடைந்தது. உலக சந்தையில் தேயிலை, றப்பர், தெங்குப்பொருட்களுக்கு ஏற்பட்ட பெரும் கேள்வியும் உயர்ந்த விலையுமே இலங்கையில் இம்மூன்று பயிர்களும் பெருமளவு பயிரிடப்படுவதற்குக் காரணமாகும.; இன்று இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் ஏறக்குறைய 75 சதவீதத்திற்கும், மொத்தத் தேசிய வருமானத்தில் 13 சதவீதத்திற்கும் இம் மூன்று பயிர்களும் பொறுப்பாக இருப்பதுன், மொத்த ஊழியப்படையில் 25 சதவீதத்திற்கு வேலைவாய்ப்பினை அளிக்கும் துறையாகவும் இது காணப்படுகின்றது. நீண்டகாலமாக இத்துறையின் இலாபமானது ஐரோப்பிய உடைமையாளர்கள், தோட்டத்துரைமார்கள், உள்நாட்டு முயற்சியாளர்கள் ஆகியோராலேயே பங்கிடப்பட்டது.

கோப்பி ஏற்றுமதியின் மூலம் அதிக வருமானம் கிடைத்தது. 1837 – 1847 காலப்பகுதியில் மலையகப் பிரதேசத்தில் கோப்பிச் செய்கை வேகமாக விருத்தியடைந்தது. தும்பறை, கம்பளை, பேராதனை, மாத்தளை, உடுகம முதலிய பிரதேசங்களில் கோப்பித் தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. கோப்பி உற்பத்தி அதிக இலாபத்தைத் தந்தமையால் அரச அதிகாரிகள் 500க்கும் அதிகமான கோப்பித் தோட்டங்களை ஏற்படுத்தினர். இக்காலப்பகுதியில் மலையகத்தில் நிலவிய அரசியல் உறுதிபாடு மற்றும் சமாதான சூழல் காரணமாகவும் வர்த்தகத்தின் அனுகூலங்களைக் கண்டி மக்கள் பரவலாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு உருவாகியதாலும் அப்பகுதிகளில் குடியானவர் கோப்பிச் செய்கையும் வேகமாக விரிவாக்கம் பெற்றது. 

1824இல் இலங்கையின் ஆளுனராகப் பதவியேற்ற எட்வேர்ட் பாண்ஸ் இலங்கையில் கோப்பிக் கைத்தொழிலின் பிரகாசமான எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த நிலையில் அரசாங்கத் தரப்பிலிருந்து பெருந்தோட்ட அடிப்படையிலான கோப்பிச் செய்கைக்குப் பல்வேறு ஊக்குவிப்புக்கள் வழங்கப்பட்டன. கோப்பி ஏற்றுமதி தீர்வையினை நீக்கியமை, கோப்பிச் செய்கை நிலங்களுக்கு நிலவரி விலக்கு வழங்கியமை, கோப்பிச் செய்கை மற்றும் கோப்பியினை பதனிடுதல் தொடர்பான உபகரணங்கள், கருவிகளுக்கு இறக்குமதி தீர்வைகள் அகற்றப்பட்டமை போன்றவை அவற்றுள் சிலவாகும். அத்துடன் ஆளுனர் பாண்ஸ் 1825இல் விதிக்கப்பட்ட தீர்வைகளை நீக்கினார். அவர் கோப்பிச் செய்கையை விருத்தி செய்வதற்காக கோப்பிகொட்டை ஏற்றுமதியின்மீது இதுகாறும் விதிக்கப்பட்டிருந்த 5சதவிகித ஏற்றுமதி வரியை 1820 இல் நீக்கினார். கோப்பித் தோட்டங்களுக்குரிய நிலவரியை (விளைவின் 1/10) 1825இல் நீக்கினார். 1829இல் விவசாய உபகரணங்களின் இறக்குமதித் தீர்வையை அகற்றியதுடன் கோப்பிச் செய்கையில் ஈடுபட்டோரை இராசகாரிய சேவையிலிருந்தும் நீக்கினார். கோப்பிச் செய்கைக்கு  நிலங்களை 1826ஆம் ஆண்டுவரையும் இலவசமாக வழங்கினார். அதன் பின்பு ஏக்கரொன்று 5 ஷீலிங்குக்கு விற்கப்பட்டது. 

கோப்பி பயிர்ச்செய்கைக்காக அரசாங்கத்தின் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளான 1840ஆம் ஆண்டு தரிசு நிலச்சட்டம், குத்தகை பாதுகாப்புக்கள், வரிச்சலுகைகள், ஒப்பந்தச் சட்டங்கள், நிலஅளவைப் பகுதி, பதிவாளர் நாயகம் பகுதி அமக்கப்பட்டமை கோப்பி வளர்ச்சிக்கு உதவியது.    

கைத்தொழில் புரட்சியின் விளைவாக இங்கிலாந்திலே ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் குடிப்பழக்கத்துக்கு ஆளானார்கள். உவெஸ்லி என்பவரின் நற்போதனைகளால் ஒழுங்குக்கொள்கை எனப்படும் “மெதடிஸ்ற்” இயக்கம் பரவ குடிப்பழக்கம் குறைந்தது. கோப்பி குடிக்கும் பழக்கம் ஐரோப்பாவில் பரவியது. அதனாலே இங்கிலாந்தில் மாத்திரமின்றி பிரான்ஸ், பெல்ஜியம் முதலிய தேசங்களிலும் இலங்கைக் கோப்பி விற்பனை செய்யப்பட்டது. இலங்கைக் கோப்பிக்கு நல்ல மதிப்பு கிடைத்தது.

1870க்குப் பிந்திய ஆண்டுகள் விசேடமாக 1872 முதல் 1877 வரை ஆள்பதியாக இருந்த வில்லியம் கிரகறியின் காலம் தான் இலங்கைக் கோப்பியின் பொற்காலமாக இருந்தது. 

இலங்கையில் கோப்பி பயிர் வீழ்ச்சியடையவே கோப்பிக்கு பதிலாக சிங்கோனா பயிரிடப்பட்டது. இதன் பயனாக 1875 இல் 5000 ஏக்கர் நிலம் இப்பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்பட்டது. சிங்கோனாவிலிருந்து பெறப்பட்ட இலாபம், கோப்பிச் செய்கையின் வீழ்ச்சிக்கும் தேயிலையின் வருகைக்கும் இடைப்பட்ட காலத்தின் வெற்றிடத்தை நிரப்ப உதவியது.

கோப்பியின் விளைச்சல் வீதம் வீழ்ச்சியுறத் தொடங்கத் தேயிலையில் ஆர்வம் அதிகரித்தது. கோப்பியின் விளைச்சல் பாதிக்கப்பட்டமையால் பெருந்தோட்டச் சொந்தக்காரர்கள் தேயிலையை பயிரிட நடவடிக்கை எடுத்தனர். இலங்கையின் பௌதீக நிலைமைகள் தேயிலைக்கு ஏற்றவையாக இருந்தன. அத்துடன் இங்கிலாந்து சந்தையில் தேயிலைக்கு அதிக விலை கிடைத்தது. தென் இந்தியாவிலிருந்து தேயிலைச் செய்கைக்காக அதிக தமிழ்தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர் தேயிலை உற்பத்தி பெருமளவு இயந்திரமயமானமை. நவீன இயந்திர சாதனங்களுடனான தொழிற்சாலைகள் தரமானதேயிலையை உற்பத்தி செய்தமை, புகையிரத வீதிகள், பெருந்தெருக்கள் காரணமாகக் போக்குவரத்துத்துறைகள் விருத்தியடைந்தமை. கொழும்பு துறைமுகம் விருத்தியடைந்தமை. இலண்டன் சந்தையில் சீனத்தேயிலைக்கு கேள்வி குறைந்தமை.

அன்றிலிருந்து இன்றுவரை தேயிலை இலங்கையின் முக்கிய பெருந்தோட்டப்பயிராக இருந்து வருகின்றது. அந்நியச் செலாவணியை அதிகமாகத் தேடித்தரும் பெருந்தோட்டப் பயிராக தேயிலை விளங்குகின்றது.

1930ஆம் ஆண்டைத் தெடர்ந்து சர்வசன வாக்குரிமையானது அளிக்கப்பட்ட காரணத்தினால் சனநாயக அரசியலில் குடியானவர்கள் சக்தி வாய்ந்தவர்களாகக் காணப்பட்டனர். இ;க்காலத்தில் நகர்ப்புறத் தொழிலாளர் மத்தியில் இடதுசாரிக் கருத்துக்கள் தீவிரமாகக் பரவி வந்தமையினால் குடியானவர்கள் இக்கருத்தினால் கவரப்படாமல் அவர்களை வேறு திசையில் திருப்புவதற்கும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அவசியமாகக் காணப்பட்டது. அத்துடன் 1ஆம் மகாயுத்தத்தின்போது வெளிநாட்டிலிருந்து உணவு இறக்குமதி தடைப்பட்டமை, உள்நாட்டில் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டிய அவசியத்தினை வற்புறுத்துவதாக இருந்தது. ஒரு புறம் குடியானவன் பிரச்சினை, மறுபுறம் உணவுப்பிரச்சினை ஆகியவற்றினைக் கரத்திற் கொண்டே 1930ஆம் ஆண்டினைத் தொடர்ந்து இலங்கையில் கிராமிப்பொருளாதாரத்தினை விருத்தி செய்வதற்கான பல செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

1935ஆம் ஆண்டு குடியேற்றத்திட்டங்கள்

•  கிராமிய விவசாய உற்பத்திகளுக்கு ஊக்கமளிக்கும் முகமாக 1948ஆம் ஆண்டு முதன் முதலாக இலங்கையில் உத்தரவாதவிலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

•    விவசாய நிலத்தின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதனைக் குறிக்கோளாகக் கொண்டு 1951ஆம் ஆண்டு உரமானியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படல்.

•  கிராமிய விவசாயிகள் பெருமளவிற்கு ஒழுங்குபடுத்தப்படாத துறையிடம் பெருமளவு கடனைப் பெற்றுக் கொடூரமாகக் சுரண்டுவதனைத் தவிர்ப்பதற்காக 1947 இலிருந்து அரசாங்கம் கிராமியக் கடன் திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.

•    1972இல் பிரதேச அபிவிருத்திச் சபைகள் அமைக்கப்பட்டமை.

இலங்கையில் விவசாயிகளின் நிலப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட முதலாவது சட்டமே 1935இல் இயற்றப்பட்ட காணிவிருத்திச்சட்டமாகும். இந்தவகையில் 1935 – 1972க்கும் இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட காணிச்சீர்த்திருத்தச் சட்டங்கள் இலங்கைப் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்தின. 

இலங்கையில் 1955ஆம் ஆண்டுவரை கைத்தொழில் வளர்ச்சியினை ஏற்படுத்துவதற்கான பொதுவானதொரு கொள்கையென ஒன்று இருக்கவில்லை. ஏனெனில் இலங்கைசுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து கொரிய யுத்தத்தினால் ஏற்பட்ட றப்பர் செழிப்பினாலும், பின்பு ஏற்பட்ட தேயிலையின் விலை ஏற்றத்தினாலும் போதிய வெளிநாட்டுச் செலாவணியினைப் பெறக்கூடியதாக இருந்தது. இதனால் இலங்கையினால் தேவையான கைத்தொழிற்பொருட்களை இறக்குமதி செய்யக்கூடியதாகவிருந்தது. 1952ஆம் ஆண்டு உலக வங்கியினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தனியார்துறை, அரசாங்கத்துறை ஆகிய இரண்டும் கைத்தொழில் வளர்ச்சியில் பங்குகொள்ள வேண்டிய அவசியத்தினை வற்புறுத்துவதாக இருந்தது. மேலும் நாட்டின் தொழில்நுட்ப அறிவினையும், மூலதன வசதிகளையும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்பதுடன் பாரிய தொழிற்சாலைகளை அரசாங்கம் உருவாக்குவதனைக் கண்டித்ததுடன், அனெக சிறு கைத்தொழில்களை அரசு அபிவிருத்தி செய்ய வேண்டுமெனவும் சிபாரிசு செய்திருந்தது. 1956ஆம் ஆண்டைத் தொடர்ந்து ஏற்பட்ட தீவிரமான வெளிநாட்டுச் செலவாணிப் பிரச்சினையானது கைத்தொழிற் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையினை உருவாக்கியது. எனவே இலங்கையின் கைத்தொழிற் கொள்கையானது வெளிநாட்டுச் செலாவணியினைச் சேமித்தல் என்ற அடிப்படையில் இறக்குமதி செய்யும் கைத்தொழில் நுகர்வுப் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்தல் அல்லது இறக்குமதி பிரதியீடு என்ற குறிக்கோளைக் கொண்டதாக இருந்தது. 

அந்தவகையில் இலங்கையில் கைத்தொழிலாக்கத்தினை ஏற்படுத்த எடுத்த முதலாவது நவவடிக்கையாக 1955ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அரசாங்க உத்தரவாதமளிக்கப்பட்ட கூட்டுத்தாபனச் சட்டமானது அமைந்தது. இச்சட்டத்தின் படி அரசாங்க கைத்தொழிற் செயற்றிட்டங்கள் மூன்று கட்டங்களினூடாக தனியார்களினால் பொறுப்பேற்பதற்கு வழிவகுக்கப்பட்டது. இலங்கை சுதந்திரமடைந்த காலந்தொட்டு ஆடசிக்கு வந்த எல்லா அரசாங்கங்களும் கலப்பு பொருளாதாரத்தில் நம்பிக்கை கொண்டிருந்தமையினால் இலங்கையின் கைத்தொழிற் கொள்கையினால் அரசாங்கக் கூட்டுத்தாபனங்களை விருத்திசெய்தல் முக்கியமான அம்சமாக இடம்பெற்றிருந்தது. 1957ஆம் ஆண்டிற்குப் பின்பு ஏற்கனவேயிருந்த பல அரசாங்கக் கைத்தொழில்கள், கூட்டுத்தாபனங்களாக மாற்றப்பட்டதுடன் பல புதிய கைத்தொழில் கூட்டுத்தாபனங்களும் உருவாக்கப்பட்டன. இலங்கையில் தனியார் துறை பலவீனமாகதாக இருந்ததால் பாரிய கைத்தொழில் முதலீடுகளை அரசாங்கமே மேற்கொள்ளவேண்டியிருந்தது. அத்துடன் தனியார் தனியார்துறை முதலீடுகள் இலாபம் கூடிய துறைகளிலே முடக்கப்படுவதனால் இலாபம் குறைந்த அத்தியாவசிய கைத்தொழில் உற்பத்தித் துறைகளில் அரசாங்க முதலீடுகள் இலாபம் கூடிய துறைகளிலே முடக்கப்படுவதனால் இலாபம் குறைந்த அத்தியாவசிய கைத்தொழில் உற்பத்தித்துறைகளில் அரசாங்க முதலீடுகள் அவசியமாக இருந்தன. 1958அம் ஆண்டு 12 ஆக இருந்த அரசாங்கக் கைத்தொழிற் கூட்டுத்தாபனங்கள் 1977இல் 28ஆக அதிகரித்துள்ளன. இக் கூட்டுத்தாபனங்கள் சீமெந்து, இரசாயனம், பெற்றோலியம், உருக்கு, உப்பு, ஒட்டுப்பலகை பொன்ற பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாத அடிப்படைக் கைத்தொழில்களாகவும், ஏனையவை சீனி, காகிதம், பால், புடவை, மா போன்ற அத்தியாவசிய நுகர்வுப் பொருட் கைத்தொழில்களாகவும் அமைந்துள்ளன. 

1950ஆம் ஆண்டிற்கு பின்பு றப்பர், தேயிலை, தென்னை ஆகியவற்றின் புனர் நடுகை மேற்கொள்ளப்பட்டமையும் உற்பத்தித்திறன் அதிகரிப்பிற்கு மற்றுமொரு காரணமாகும். பெருந்தோட்ட விவசாய விருத்திக்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாகும் 

புனர்நடுகை மானிய உதவித்திட்டம் 

1. 1953 – றப்பர் புனர் நடுகை மானியத்திட்டம்

2. 1959 – தேயிலை புனர்நடுகை மானியத்திட்டம்;

உரமானியத் திட்டம் (1950)

தேயிலைத் தொழிற்சாலை அபிவிருத்தி மானியத் திட்டம் (1962)

நிறுவன ரீதியான ஊக்கங்கள்

1. அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம்(1958)

2. தேயிலை ஆராய்ச்சி நிலையம்

3. றப்பர் ஆராய்ச்சி நிலையம்

4. தெங்கு ஆராய்ச்சி நிலையம்

பயிர் மாற்றுநடுகைத் திட்டம் 

1. பப்பாசி

2. அன்னாசி

3. முசுக்கட்டைச்செடி

4. சூரியகாந்தி


இலங்கையில் 19ஆம் நூற்றாண்டின் முதற் கால்ப்பகுதியிலிருந்து பெருந்தொட்ட விவசாயத்தின் ஆரம்பத்துடன் வெளிநாட்டு வர்த்தகமானது முக்கிய இடத்தினைப் பெறலாயிற்று.

1970க்கு பின்பு பெருதோட்டப் பயிர்களின் உற்பத்தித் திறனில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு உரநுகர்வு குறைக்கப்பட்டமை மட்டுமன்றி, காணிச் சீர்திருத்தத்தினால் ஏற்பட்ட அசாரண நிலையும் மிக முக்கியமான காரணியாக அமைந்திருந்தது. இலங்கையில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்பட்ட கைத்தொழிற் கொள்கையானது ஒரு ஆரோக்கியமான கைத்தொழில் வளர்ச்சியினை ஏற்படுத்த தவறிவிட்டது. மேலும் தவறான முறையில் கைத்தொழில் துறையில் சாதனங்கள் முடக்கப்பட்டுள்ளமை நீPண்டகாலக் கைத்தொழில் வளர்ச்சியினைப் பாதிப்பதாக அமைந்துள்ளது. இலங்கையில் 1977ஆம் ஆண்டு ஐக்கிய தேசியகட்சி அரசாங்கமானது ஆட்சிக்கு வந்தபோது வேலையின்மை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகிய இரண்டும் மிகத் தீவிர பிரச்சினைகளாகக் காணப்பட்டன. அந்தவகையில் சுதந்திர வரத்தக பொளாதாரத்தினை அறிமுகப்படுத்தியது.

எனவே தொகுத்து நோக்கும் போது இலங்கைப் பொருளாதாரத்தில் கோல்புறூக் கமரன் சீரத்திருத்தின் விளைவாக பெருந்தோட்ட பொருளாதார விருத்தி ஏற்பட்டதை தொடர்ந்து கைத்தொழில் அபவிருத்தி, அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள், வெளிநாட்டில் இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு இருந்த கேள்வி, வர்த்தக வளர்ச்சி என்பன  காரணிகள் செல்வாக்கு செலுத்தின எனலாம். 


No comments:

Post a Comment

1800 – 2000 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கைப் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்திய காரணிகள்

இலங்கையின் பொருளாதாரத்தினை பொதுவாக அபிருத்தியடைந்து வரும் அல்லது குறைவிருத்திப் பொருளாதாரம் என வரையறை செய்வது மரபாகும். அத்துடன் இலங்கையின் ...