Tuesday 1 December 2020

போல்கன் நாடுகளில் துருக்கியருக்கு எதிரான தேசிய எழுச்சியும் பல்கேரியரின் சுதந்திரபோராட்டமும்

 

    குரொயேஷியா, போஸ்னியா, ஹெர்ச்சிகோவினா, மாசிடோனியா, சேர்பியா, மாண்டிநெக்ரொ, அல்பெனியா, கிறீஸ், பல்கேரியா ஆகிய நாடுகளைக் உள்ளடக்கிய நிலப்பரப்பே பால்கன் நாடுகள் என்றழைக்கப்படும் தீபகற்பபகுதியாகும். இதில் திரெஸ், துருக்கியின் சில பகுதிகள் அடங்கும். 

போல்கன் குடா அல்லது போல்கன் தீபகற்பம் ஐரோப்பாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒருகுடா பகுதி. இப்பகுதி தென்கிழக்கு ஐரோப்பா என்றும் வழங்கப்படுகின்றது. பல்கேரிய நாட்டிலிருந்து சேர்பியா வரை பரவிக்காணப்படும் பால்கன் மலைத்தொடரின் பெயரே இதற்கும் வழங்கப்படலாயிற்று. “பால்கன்” என்ற சொல்லுக்கு துருக்கி மொழியில் காடுகள் சூழ்ந்த மலைத்தொடர் என்று பொருள்படும். பண்டைய கிரேக்கத்தில் இப்பகுதி ஹீமாஸ் குடா என்று அழைக்கப்பட்டது.

போல்கன் பகுதியின் புவியியல் எல்லைகளாக தெற்கில் மத்தியதரைக்கடலும், தென்கிழக்கில் ஏஜியன் கடலும் , வடகிழக்கில் கருங்கடலும், வடமேற்கில் ஏட்றியாட்டிக்கடலும் தென்மேற்கில் அயோனியன் கடலும், வடக்கில் கொச்சிக்கா கிறுக்கா ஆறும் உள்ளடங்குகின்றது.  

ரஸ்யாவின் பெரும்பான்மை இனமாக ஸ்லாவியர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இங்கு குடிப்பெயர்ந்த வாழ்ந்த வந்தனர். சேர்பியாவில் ஸ்லாவிய அர்த்தடாக்ஸ் கிறிஸ்தவரும், சேர்பியப்பகுதியாக இருந்த கோஸவோவிலும் அதன் அண்டை நாடுகளான அல்பேனியாவிலும் முஸ்லிம்களும் குரோவேயாவில் கத்தோலிக்க மதத்தவரும் பெரும்பான்மையாக உள்ளனர். 

பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய, ஆசிய பகுதிகளை தரைவழியாக இணைப்பதனாலும் மத்தியதரைக்கடலுக்கும் கருங்கடலுக்கும் இடையேயான நிலப்பரப்பை கொண்டிருந்நதாலும் வாணிப முக்கியத்துவம் மிகுந்ததாகவும் பல கலாச்சாரங்களையும் பேரரசு மாற்றங்களையும் கொண்ட பிரதேசமாக போல்கன் பிரதேசம் விளங்கியது. 

1908 ஒட்டோமன் துருக்கி தனது ஆட்சியின் கீழ்  தற்போதைய சேர்பியா, பல்கேரியா, அல்பேனியா, கிறீஸ் ஆகிய நாடுகளைக் கொண்டிருந்தது.  1908 துருக்கி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக அந்நாட்டின் ராணுவத்தலைவர் “அஹ்மத் நியாஸ் பாய்” அவரால் 200 இளைஞர்களுடன் 3 ரேஷன்களால் இளந்துருக்கியர் புரட்சியை மேற்கொண்டனர். இந்தப்புரட்சி நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படத்தியது. இவ்அவரச நிலைமையை உணர்ந்துக்கொண்ட சுல்தான் 1876ஆம் ஆண்டு அரசியலமைப்புச்சட்டம் மீளுருவாக்கம், படைகளின் சீர்திருத்தம், இரண்டாம் அரசியலமைப்பு அரசை அறிவித்தார்.  இதனால் ஒட்டோமன் துருக்கி பேரரசு வீழ்ச்சியை சந்திக்க தொடங்கியது. 

1912 போல்கன் நாடுகளான சேர்பியா, மண்டி நீக்ரோ, பல்கேரியா, கிறீஸ் மற்றும் அல்பேனியா நாடுகள் துருக்கியின் பலவீனத்தை அறிந்துக் கொண்டு அதன் சுதந்திரத்தை அறிவித்துக்கொண்டன. அத்தோடு துருக்கியுடன் போர் செய்து ஒட்டோமன் துருக்கியின் பெரும் பகுதியைக் கைப்பற்றியது. இது ஒட்டோமன் துருக்கியின் வீழ்ச்சிக்கு மேலும் காரணமாகியது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே போல்கன் நாடுகள் ஒட்டோமன் துருக்கியின் ஆட்சியில் இருந்து ஒவ்வொன்றாக விடுதலை பெறத் தொடங்கின. இதுவே போல்கன் நாடுகளின் துருக்கியருக்கு எதிரான தேசிய எழுச்சி பற்றிய சுருக்கமாகும் இனி அதனை விரிவாக நோக்கலாம்.

ஒட்டோமன் தென்கிழக்கு ஐரோப்பாவிலே தங்கள் வெற்றிநெறியை ஆரம்பித்த பொழுது போல்கன் தீபகற்பம் தாக்குதலை எதிர்த்து வெல்லமுடியாத நிலைமையில் இருந்தது. 200 ஆண்டுகளுள் விசாலித்துப் பரம்பியிருந்த பல்வேறு ஆணிலங்களுட் பெரும்பாலானவை ஒட்டோமன் பேரரசு வலைக்குள் அகப்பட்டன. 1361 இல் பைசாந்திரிய பேரரசின் தளர்ந்த பிடியிலிருந்து அதிரியானோபிள் பறித்தெடுக்கப்பட்டது. அக்காலத்திலிருந்து 1453 வரையும் அது துருக்கிய எமிரின் ஐரோப்பியத் தலைநகராயிருந்தது. 1363 இல் பிலிபொலிசையும் 1382இல் சேபியாவையும் பல்கேரியர் விட்டுக்கொடுக்க வேண்டியவராயினர். 1393இல் திருநோவோ அழிவடைதலோடு ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்குப் பல்கேரியாவின் சுதந்திரம் மறைந்தொழிக்கப்பட்டது. இதற்கிடையில் சிலாவியரின் பெரியவொரு கூட்டிணைப்பொன்று முறியடிக்கப்பட்டது. 1389 இல் கொசோவோ சமவெளியில் நடந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போரின் விளைவு சேர்பியப் பேரரசின் வீழ்ச்சியோடு நின்றுவிடவில்லை. அது தென்சிலாவியரின் அரசியல் நிலையைப் பல ஆண்டுகளுக்கு முற்றாக அழித்தது. சேர்பியா 1459 இலும், பொசினியா 1465 இலும் ஒட்டோமன் துருக்கி பேரரசுடன் இணைக்கப்பட்டது. இவ்விளைவுகள் யாவற்றிக்கும் துருக்கியர் கொன்ஸ்தாந்தனேபிளைக் கைப்பற்றியமையே காரணம் எனலாம்.

போல்கன் நிலப்பகுதியில் சேர்பியர்களும் அல்பேனியர்களும் பல நூற்றாண்டுகளாக அருகருகே வாழ்ந்து வந்தனர். முதலில் ரோமப்பேரரசின் கீழும் பின்னர் பைசாண்டிய பேரரசின் கீழும் இருந்த காலத்தில் சேர்பியர்கள் மற்றும் அல்பேனியர்கள் கலாசாரத்தில் பெருத்த வேறுபாடுகள் இல்லை. 14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை சேர்பியர்களின் கையில் இருந்த இந்த நிலப்பிரதேசம் 1389இல் ஒட்டோமன் துருக்கி அரசுடனான போரில் தோல்வியடைந்து அடிமையுற்றது. அடுத்த நூறு வருடங்களில் போல்கன் பகுதிகள் முழுமையாக துருக்கியின் ஆதிக்கத்தின் கீழ் வந்தன. வேளாண்மைக்கு ஏற்ற வளமான பகுதிகளாக இருந்த அல்பேனியா மற்றும் கோஸவா பகுதிகளில் அல்பேனிய இனத்தவர்கள் அதிக அளவில் இடம்பெயர்ந்து வாழத்தொடங்கினர். 

ஒட்டோமன் பேரரசின் கீழ் படிப்படியாக இந்த அல்பெனியர்கள் இஸ்லாமுக்கு மாற ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவம் எனப்படும் பழைய கிறிஸ்துவத்தைச் சார்ந்திருந்த பல சேர்பியர்கள் அல்பேனிய மற்றும் கோஸவோவை விட்டு வெளியேறி வடக்கே பெல்கிரெட்டை நோக்கி நகரத்தொடங்கினர். 

15ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்பேனியாவிலும் கோஸவாவிலும் கிறிஸ்துவம் சிறுபான்மையாக்கப்பட்டு விட்டது.. ஆதிக்க இனமாக இருந்த சேர்பிய இனம் ஒட்டோமன் துருக்கி பேரரசில் இரண்டாம்தர குடிகளாக்கப்பட்டனர். 

ஒட்டோமன் பேரரசில் மேலாண்மையை இழந்த சேர்பியர்கள் அதனை மீண்டும் பெறும் நாள் ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு பின் வந்தது. 19 அம் நூற்றாண்டில் ஐரோப்பா பலம் பெறத்தொடங்கியது. துருக்கியை மையமாகக் கொண்ட ஒட்டோமன் பேரரசு பலம் இழக்கத்தொடங்கியது. இந்நிலையில் 1878இல் ஒட்டோமன் துருக்கி - ரஸ்யப்போர் தொடங்கியது.

போர் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் போல்கன் நாடுகளின் தேசிய எழுச்சியின் அதிகரிப்பு என வரலாற்றாசிரியர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். எனவே ரஸ்யா துருக்கிக்கு எதிரான போரினை 1877 ஏப்ரல் 24 ஆம் திகதி அறிவித்தது. இப்போரில் ரஸ்யாவின் குறிக்கோள் துருக்கிய ஆதிக்கத்தில் இருந்து ஸ்லாவிக் மக்களை விடுவிப்பதாகும். இப்போரின் பின்ணனியை நோக்கும் போது 1875ஆல் போஸ்னியா மற்றும் ஹெர்சகொவினால் துருக்கிய ஆதிக்கத்திற்கு எதிராக எழுச்சி தொடங்கியது. இவ் எழுச்சிக்கு முக்கிய காரணம் நிதி ரீதியாக ஒட்டோமன் துருக்கியால் விதிக்கப்பட்ட அதிகப்படியான வரிகளாகும்.  ஒரு வருடம் கழித்து ஏப்ரல் மாதம் 1876 பல்கேரியாவில் ஒரு எழுச்சி வெடித்தது. துருக்கியர் இக்கிளர்ச்சியினை நெருப்பு மற்றும் வாளால் மிகக்கொடுரமாக அடக்கினர். பல்கேரியாவில் மட்டும் 30 ஆயிரம் பேர் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் துருக்கிக்கு எதிராக சேர்பியா மற்றும் மாண்டினீக்ரொ போரைத் தொடங்கியது. ஆனால் இப்படையெடுப்பு யூலை - ஆகஸ்டில் தோல்வியில் முடிவுற்றது. 

ரஸ்யாவில் ஸ்லாவ்களைப் பாதுகாப்பதற்கான ஒரு சமூக இயக்கம் விரிவடைந்தது. ஆயிரங்கணக்கான ரஸ்ய தொண்டர்கள் போல்கன் சென்றனர். நாடு முழுவதும் நன்கொடைகள் சேர்க்கப்பட்டன. இராணுவத்தில சீர்திருத்தங்கள் செய்யப்பட்டது.டிசம்பர் 11 அன்று ரஷ்யாவின் முன்முயற்சியினால் கூட்டப்பட்ட “கான்ஸ்டான்டினோபிள் மாநாடு”  தொடங்கியது. ஒரு சமரச முடிவு உருவாக்கப்பட்டது. இது பல்கேரியா, போஸ்னியா மற்றும் ஹெர்சகொவினா ஆகிய நாடுகள் கூட்டு கட்டுப்பாட்டின் கீழ் சுயாட்சியை வழங்க முடிவெடுக்கபப்பட்டது. எனினும் துருக்கிய மாநாட்டு முடிவுகளை அங்கீகரிக்க மறுத்துவிட்டது.  இதனால் 1877.ஜனவரி. 20 இல் கான்ஸ்டான்டினோபிள் மாநாடு முடிவு இல்லாமல் முடிந்தது.  

துருக்கிக்கு எதிரான போர்த்திட்டம் அக்டோபர் 1876 இல் ஜெனரல் N.N. ஒப்ருச்சேவ் அவர்களால் வரையப்பட்டது. மார்ச் 1877க்குள் இவ்திட்டத்தை பேரரசர், போர் அமைச்சர், தளபதி, கிராண்ட் டியூக் நிகோலாய் நிகோலேவிச் சீனியர், ஜெனரல்.யு.யு. நேபோகோயிட்ச்கி, மேஜர் ஜெனரல் கே.வி. லெவிட்ஸ்கி ஆகியோரால் சரி செய்யப்பட்டது. 

1877 ஏப்ரல் 12 ரஸ்யாவின் இரண்டாம் அலெக்சாண்டர் துருக்கியுடனான போர் வெடித்தமை குறித்த அறிக்கையில் கையெழுத்திட்டார். கருங்கடலில் துருக்கிய கடற்படை முற்றிலும் ஆதிக்கம் செலுத்தியது. அடுத்தடுத்த போரின் போது ரஸ்ய இராணுவம் துருக்கியர்களின் செயலற்ற தன்மையைப் பயன்படுத்தி டானூப்பையும் ப்கா பாஸையும் கைப்பற்றியது. 5 மாத முற்றுகையின் பின்னர் ஒட்டோமன் பா~hவின் சிறந்த துருக்கிய இராணுவத்தை பிளெவ்னாவில் சரணடையும்படி கட்டாயப்படுத்தியது. 

போல்கன் வழியாக ரஸ்யா இராணுவம் கடைசி துருக்கிய பிரிவுகளை தோற்கடித்து கான்ஸ்டான்டினோபிளுக்கு செல்லும் பாதையைத் தடுத்தது. ஒட்டோமன் துருக்கியினை போரிலிருந்து அடிபணிய வழிவகுத்தது. 1878இல் பெர்லின் உடன்படிக்கை கையெழுத்தானது. 1396 இல் ஒட்டோமன் பேரரசால் கைப்பற்றப்பட்ட பல்கேரியா மாநிலம் மீட்டெடுக்கப்பட்டது. 

1878 இல் நடந்த ஒட்டோமன் - ரஸ்யப்போரில் ஒட்டோமன்; பேரரசு தோல்வியடைய ஸ்லாவிய ரஸ்யாவின் நட்பு இனமான சேர்பியர்கள் மீண்டும் பலம் பெறத்தொடங்கினர். சேர்பிய தேசியவாதம் பலமடங்கு பலமடைந்தது. ஆனால் இதன் எதிர்விளைவாக கோஸவோ நிலப்பரப்பில் சிறுபான்மையாய் இருந்த சேர்பியர்கள் அல்பேனியர்களால் வடக்கு நோக்கி தள்ளப்பட்டனர். கோஸவோ நிலப்பகுதி இஸ்லாமிய அல்பேனியர்கள் ஆதரவு பகுதியாகவும் சேர்பியா ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துவத்தை சார்ந்தவர்கள் பகுதியாகவும் உருவெடுத்தது. 19ஆம் நூற்றாண்டின் முடிவில் சேர்பியர்கள் கையில் மீண்டும் சேர்பிய ஆதிக்கம் முழுமையாக வந்தடைந்தது.

1789 இல் நிகழ்ந்த பிரான்சியப்புரட்சியும் அதைத்தொடர்ந்த எழுச்சிகளும் போல்கன் நாடுகளிலே தெளிவான தொடர் விளைவுகளை ஏற்படுத்தியது. துருக்கியின் ஆதிக்கத்தின்கீழ் அமைக்கப்பட்டிருந்த நாட்டினங்களிற் சேர்பியரே முதலில் வெளிப்பட்டனர். 1804 இல் இவர்கள் கலகக்கொடியை உயர்த்தி 1817 இல் அவ்நாட்டு ஒபரனொவிச்சு குலத்தின் பரம்பரை இளவரசன் ஒருவனின் கீழ் ஒன்றுபட்டு துருக்கியரிடமிருந்து ஓரளவுத்தன்னாட்சியைப் பெறும் வரையும் வீரத்துடன் ஓயாது போர் புரிந்தனர். 

இதன்பின்னர் 1912 அக்டொபர். 08 முதல் 1913 மே. 30 வரை முதலாவது போல்கன் போர் ஏற்பட்டது, ஒட்டோமன் துருக்கிய பேரரசுக்கு எதிராக பல்பேரியா, சேர்பியா, கிரீஸ் மற்றும் மாண்டினீக்ரோ ஆகிய போல்கன் நாடுகள் ஒன்றுசேர்ந்து யுத்ததில் ஈடுபட்டமையே முதலாவது போல்கன் போராகும். இப்போரில் போல்கன் நாடுகள் வெற்றி பெற்று தங்களை சுதந்திர நாடுகளாகக் அறிவித்துக்கொண்டன. ஒட்டோமன் துருக்கியர்களுக்கு இவ்யுத்தம் திட்டமிடப்படாத பேரழிவாக இருந்தது.  துருக்கி ஐரோப்பாவில் 83 வீதமான பிரதேசங்களையும் ஐரோப்பிய மக்கள் தொகையில் 69 வீதமான மக்களையும் இழந்தனர். துருக்கியின் மீதமுள்ள அனைத்து ஐரோப்பிய பிராந்தியங்களையும் போல்கன் நாடுகள் கைப்பற்றி பிரிந்துக்கொண்டன. 

ஒட்டோமன் பேரரசின் கீழிருந்த நாடுகள் பல்வேறு இனங்களையும் கலாச்சாரங்களையும் கொண்டிருந்தன. அந்த மக்களின் தேவைகளை அறிந்து கொள்ளவோ அவற்றுக்கேற்ப சீர்திருத்தங்களை மேற்கொள்ளவோ ஒட்டோமன் பேரரசால் இயலவில்லை. இதனால் ஒட்டோமன் பேரரசின் கீழிருந்து தன்னிச்சையாகத் தம்மை விடுவித்துக்கொண்ட இந்த நாடுகள் தமது பகுதிகளை மீட்கத்திட்டமிட்டன. இதன் அடிப்படையில் பல்கெரியா, சேர்பியா, கிறீஸ,; மாண்டிநெக்ரோ ஆகிய நான்கு நாடுகளின் கூட்டமைப்பு உருவானது. ஒட்டோமன் துருக்கி பேரரசின் மீது பன்முனைத்தாக்குதல் நடாத்த திட்டம் தீட்டப்பட்டது. பல்கேரியாவின் படைப்பலமும் கிரிஸின் புதுப்பிக்கப்பட்ட கப்பல் படையும் இணைந்து கூடுதல் பலம் சேர்த்தது. 

முதல் போல்கன் போரில் பல்கேரியா இராணுவ ரீதியாக மிகவும் சக்திவாய்ந்ததாக காணப்பட்டது. பல்கேரிய இராணுவத்தில் 4.3 மில்லியன் மக்கள் தொகையில் மொத்தம் 599,878 ஆண்களை இராணுவத்தில் இணைத்தது. பல்கேரிய இராணுவத்தில் 9 காலாட் படைபிரிவகள் ஒரு குதிரைப்படைப்பிரிவுகள் 1116 பீரங்கிகள் ஆகியன காணப்பட்டது. இராணுவ தளபதியாக ஜார் ஃபெர்டினாண்ட் நியமிக்கப்பட்டதுடன், துணை ஜெனரலாக மிஹைல் சாவோ நியமிக்கப்பட்டனர். பல்கேரியர்கள் 6 டார்பிடோ படகுகளைக் கொண்ட ஒரு சிறிய கடற்படையையும் கொண்டிருந்தனர். பல்கேரியா திரேஸ் மற்றும் மாசிடொனியாவில் தனது நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியது. பல்கேரியா மூன்று படைப்பிரிவாக பிரிந்து செயற்பட்டது. முதல் இராணுவம் (79,370 ஆண்கள்) ஜெனரல் வாசில் குட்;டின்செவின் கீழ் யம்பொலின் தெற்கே ட்ண்ட்ஷா ஆற்றின் குறுக்கே தன் படை நடவடிக்கைகளைக் மேற்கொண்டது. ஜெனரல் நிகொலா இவானாவின் கிழ் இரண்டாவது இராணுவ பிரிவு (122,748 ஆண்கள்) அட்ரியானொபிலின் கோட்டையைக் கைப்பற்ற நியமிக்கப்பட்டனர். மூன்றாம் படைபிரிவு ராட்கோ டிமிட்ரீவின் கீழ் ஸ்ட்ரான்ஜா மலையைக் கடக்கவும் கிர்க் கிலிஸ் (கோர்க்லரோலி) கோட்டையை கைப்பற்ற நியமிக்கப்பட்டது. 

சேர்பியா முன்னாள் போர் மந்திரி ராடோமிர் புட்னிக் தலைமையில் 258,000 வீரர்களையும் 228 கனரக துப்பாக்கிகளுடன் தனது போர்ப்படைப்பிரிவினை செயற்படுத்தியது. 

ஒட்டோமன் துருக்கி பேரரசு மிகவும் ஆபத்தான வேறொரு போரில் ஏற்கனவே சிக்கியிருந்தது. கிரேக்க அரசறிஞரான M.K வெனிசெலோசும் பல்கேரிய அரசறிஞரான எம். கெசோவும் தம் பொறுமையாலும் திறமையாலும் தம் இருநாடுகளையும் சேர்பியாவையும் மொண்டிநிக்ரொவையும் ஒன்றுபடுத்தி துருக்கிக்கெதிராக ஒரு கூட்டிணைப்பைத் தாபித்தனர். தீபகற்பத்தில் அந்நாடுகளுக்கிடையேயிருந்து முரண்பாடுகளையும் பண்டைதொட்டு பகைமைகளையும் பார்க்குமிடத்து இவ்வொற்றுமை அற்புதமான வெற்றியாகும். 1912 ஒக்டோபர் 8 ஆம் திகதி மொன்டிநீக்ரோ துருக்கி மீது போர்ப்பிரகடனம் செய்தது. 14ஆம் திகதி பல்கெரியா, செர்பியா, கிறீஸ் ஆகிய நாடுகள் கொன்ஸ்தாந்துனெபிளில் தமது இறுதிக்கூற்றைச் சமர்ப்பித்தன. 18ஆம் திகதி வரையில் துருக்கியானது அக்கூட்டிணைப்பு நாடுகள் நான்குடனும் போரில் ஈடுபட்டது.

மறுபுறத்தில் இத்தகைய போரை எதிர்கொள்ள ஒட்டோமன் படைகள் தயார் நிலையில் இல்லை. இளந்துருக்கியர் கலகத்திற்குப் பிறகு பெரிய அளவிலான போர்பயிற்சி எதனையும் மேற்கொள்ளாத துருக்கி படைகளின் தளபதிகளும் அனுபவமற்ற புதியவர்களாக இருந்தனர். போல்கன் அணிப்படைகளின் எண்ணிக்கையினைவிட துருக்கிய படைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. கூடுதல் படைகளையும் ஆயுதங்களையும் ஏதுவான சாலை மற்றும் இரும்புபாதை வசதிகளும் இல்லை. 1912 ஆம் ஆண்டில் துருக்கி பெரிய மக்கள் தொகையைக் கொண்டிருந்ததோடு கடினமான நிலையில் காணப்பட்டது. ஒட்டோமன் துருக்கியின் இராணுவத்திறன்கள் பல காரணிகளால் தடைப்பட்டன. உள்நாட்டு மோதல்கள் தொடங்கி இளம் துருக்கி புரட்சி மற்றும் பலமாதங்கள் கழித்து எதிர்புரட்சிகர சதி ஆகியவற்றால் துருக்கி இராணுவம் பாதிக்கப்பட்டது. 

ஒரு மாதகாலத்துக்குள் எம். கெசோவு வெற்றி உணர்ச்சியுடன் எழுதியது போல போல்கன் நட்புறவு ஒட்டொமன் துருக்கி பேரரசைத் தகர்த்தது. 1,00,00,000 குடித்தொகையுள்ள நான்கு சிறிய நாடுகள் 2,50,00,000 குடித்தொகையுள்ள ஒரு பெரிய வல்லரசைத் தோற்கடித்து விட்டன. ஐரோப்பிய வல்லரசுகளின் வேண்டுகோட்படி பொரு நாடுகள் டிசம்பர் 03 அந் திகதி படைத்தகைவு செய்ய ஒப்புக்கொண்டன. கிரேக்க கடற்படையின் நடவடிக்கைகளை இப்படைத்தகைவு கட்டப்படுத்தலாகாதெனவும் விதிக்கப்பட்டது. இதற்குக் காரணம் அக்கடற்படையானது ஈஜியன் கடலில் முக்கியமான சில நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமையே.

படைத்தகைவிற்குச் கைச்சாத்திட்ட பத்து நாட்களின் பின்னர் போரிட்ட நாடுகள் எல்லாவற்றின் பேராளர்களும் இலண்டனிற் கூடினார்கள். இங்கே பிரித்தானிய பிறநாட்டு அமைச்சன் சேர் எட்வேட்டு கிரே முதலில் போரைத்தவிர்க்கவும் பின்னர் அதை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரவும் தீவிரமாக வேலை செய்;து கொண்டிருந்தான் (1913 ஜனவரி 23 ஆம் திகதி) அமைதிப்பொருத்தணையின் நியதிகளை ஏற்பாடு செய்து முடித்த பொழுது துருக்கிய இளைஞர் கொன்சுதாந்தினோபிளில் ஒரு திடீர் புரட்சியை நிறைவேற்றினர். அதனால் இலண்டணில் நடந்தகொண்டிருந்த இணக்கப்பேச்சுக்கள் சடுதியாக முடிவுற்றன.

இவ்முதலாவது போல்கன் போரில் துருக்கி தோல்வியடைய பல காரணங்கள் விவரிக்கப்பட்டது. இரண்டாம் சுல்தான் அப்துல்ஹமீட்டின் கொடுங்கோன்மை மற்றும் சித்தப்பிரமை ஆட்சியின் கீழ் துருக்கி இராணுவம் சூழ்ச்சிகளிலோ அல்லது யுத்த விளையாட்டுக்களில் ஈடுபடவோ தடைசெய்யப்பட்டிருந்தது. 1908 ஆம் ஆண்டின் இளம் துருக்கியர் புரட்சிக்குப் பின்னர் நான்கு ஆண்டுகள் இராணுவம் பெரிய அளவிலான சூழ்ச்சிகளை எவ்வாறு நடத்துவது என்பதை கற்றுக்கொள்ள போதுமான நேரம் இல்லை. 

துருக்கிய இராணுவம் இரண்டு வகுப்புக்களாகப் பிரிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளாக கட்டாயப்படுத்தப்பட்ட நிசாமியே துருப்புக்களும், 7 ஆண்டுகள் பணியாற்றிய இடஒதுக்கீட்டாளர்களான ரெடிஃப் ஆகியனவாகும். ரெடிஃப் துருப்புக்களுக்கான பயிற்சி பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்டது. மேலும் 1912 ஆம் ஆண்டில் போல்கனில் 50,000 ரெடிஃப் துருப்புக்கள் மிகச் சிறந்த பயிற்சிப்பெற்றன. ஒட்டோமன்களுடன்; பணியாற்றிய ஒரு ஜேர்மன் அதிகாரி மேஜர் ஓட்டோ வான் லோசோவ் சில ரெடிஃப் துருப்புக்களுக்கு ஒரு துப்பாக்கியைக் கையாளவோ அல்லது சுடவோ தெரியாது என்று புகார் கூறினார். 

ஒட்டோமன் இராணுவத்தில் மருத்துவ சேவைகள் போன்றன மிகவும் மோசமானதாகக் காணப்பட்டது. வைத்திய பற்றாக்குறை நிலவியதுடன் அம்புலன்ஸ் சேவைகளும் பற்றாக்குறையாகக் காணப்பட்டது. அத்துடன் சில மருத்துவபீடங்கள் அதிக எண்ணிக்கையிலான காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க முற்றிலும் போதுமானதாக இல்லை. இதன் விளைவாக காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் இறந்தனர். இது மனவுறுதியைச் சிதைத்தது. அத்துடன் இராணுவ வீரர்களுக்கு உணவும் வழங்கமுடியவில்லை. அப்படியிருந்தும் ஒட்டோமன் வீரர்கள் தினசரி 90 கிராம் சீஸ் மற்றும் 150 கிராம் இறைச்சியுடன் வாழ்வாதார நிலைக்கு கீழே வாழ்ந்தனர். ஆனால் நாள் முழுவதும் அணிவகுத்துச் செல்ல வேண்டியிருந்தது. இதனால் இராணுவத்தின் பெரும்பகுதி நோய்வாய்ப்பட்டு சோர்ந்து போயிருந்தது.

1912 இலையுதிர்காலத்தில் பெய்த கனமழையால் போல்கன் மண்சாலைகளை புதைகுழிகளாக மாற்றியது. இதனால் களத்தில் இராணுவத்திற்கு வெடிமருந்துகளை வைப்பது மிகவும் கடினமாக இருந்தது. இது போன்ற காரணங்களால் போல்கன் போரில் ஒட்டோமன் படை பெரும் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது.

போல்கன் போர் பெப்ரவரி 4ஆம் திகதி மீண்டும் தொடங்கி ஏப்ரலில் பிற்பகுதி வரையிலே தொடர்ந்து நடந்தது. மே மாதத்தில் இணக்கப்பேச்சுக்கள் இலண்டனில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. மே 30 ஆம் திகதி அமைதிப்பெருத்தனை கைச்சாத்திடப்பட்டது. கிறீற்றையும் கருங்கடலிலுள்ள மடியாவிலிருந்து ஈஜியன் கடலிலுள்ள ஈனேசுவரையுமுள்ள ஆள்புலங்களையும் துருக்கி கைவிட்டது. இதனாற் கொன்ஸ்தாந்துனேபிளையும் அதன் சுற்றாடலையும் தவிர ஐரோப்பியத் துருக்கி மறைந்தொழிந்ததெனலாம்.  

கிழக்கு திரெஸ் எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிபணிய விரம்பாத
கிரேக்கமும் சேர்பியாவும் தங்கள் பரஸ்பர வேறுபாடுகளைத் தீர்த்துக்கொண்டு லண்டன் உடன்படிக்கை முடிவுக்கு வருவதற்கு முன்பே 01.மே.1913 அன்று பல்கேரியாவுக்கு எதிராக இயக்கப்பட்ட ஒரு இராணுவ கூட்டணியில் கையெழுத்திட்டன. இதைத் தொடர்ந்து 1913 மே, ஜீன் 01 அன்று “பரஸ்பர நட்பு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம்” செய்யப்பட்டது. இவ்வாறு இரண்டாம் போல்கன் போருக்கான காட்சி அமைக்கப்பட்டது.  ஐரோப்பாவில் துருக்கி பேரரசின் கீழ் இருந்த பகுதிகளை போல்கன் நாடுகள் கைப்பற்றின.  இப்போரில் வெற்றிப்பெற்றாலும் தனக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை என பல்கெரியா கருதி இரண்டாம் போல்கன் போருக்கு வழிவகுத்தது. முதல் உலகப்போருக்கு போல்கன் போர் முக்கிய காரணமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தவகையில் துருக்கியருக்கு எதிரான போல்கன் நாடுகளின் தேசிய எழச்சி அமைந்தது. இனி பல்கேரியரின் சுதந்திரபோராட்டம் பற்றி நோக்குவோம்.

பல்கேரியா எனும் நாடு போல்கன் பிராந்தியத்தில் நீண்ட வரலாற்றினைக் கொண்ட ஓர் நாடாகும். முதலாம் போல்கன் போரின் தொடர்ச்சியாகவே பல்கேரியரின் சுதந்திர போராட்டம் அமைகின்றது.

ஆசிய கண்டத்தின் 1,10,994 ச.கி.மீ பரப்பளவினை உடைய சோபியா நகரினை தலைநகராகக் கொண்டது பல்கேரியா. மற்ற முக்கிய நகரங்களாக ப்ளோவ்டிவ், வர்ணா, புர்காஸ் ஆகிய திகழ்கின்றன.  இதன் எல்லைகளாக கருங்கடல், துருக்கி, கிறீஸ், மெசடொனியா, சேர்பியா, மாண்டிநிக்ரோ, ரொமேனியா ஆகியவற்றைக் எல்லைகளாகக் கொண்டது. பல்கேரியாவின் வரலாற்றுச்சுருக்கத்தினை நோக்கும் போது 1018 வரை தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தில் வாழ்ந்து வந்த பகுதி அதற்குப் பிறகு பைசான்ட்டியன்ஸ் 1018 – 1185 வரையும் துருக்கி பேரரசு 1398 – 1792 வரை ஆட்சி செய்தது. அந்தவகையில் பல்கேரியாவின் வரலாறு 632 இல் தொடங்குகின்றது. 681 இல் முதல் பல்கேரிய இராச்சியம் “கான் அஸ்பாரு” என்பவரால் நிறுவப்பட்டது. 

இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அதன் எல்லைகளை மேற்கில் சார்லமேனின் பேரரசிற்கும், தெற்கில் கான்ஸ்டான்டினோபிளுக்கும் விரிவுபடுத்தியது. பின்னர் பைசான்டியம் பல்கேரியாவைக் கைப்பற்றியது. 1018 முதல் 1186 வரை நாட்டை பேரரசர் வாசிலி போல்கரோபாய்ட்ஸி ஆட்சி செய்தார். எனினும் 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் பல்கேரியா ஒட்டோமன் பேரரசால் கைப்பற்றப்பட்டது. 

1760 களில் தொடங்கிய சுதந்திர போராட்டம் 1878இல் ரஸ்யாவின் உதவியும் கிடைத்தது. இதன் காரணமாக கம்யூனிச சிந்தனைகள், சித்தாந்தங்கள், அரசியல் கொள்கைகள் ஆகிய காணப்பட்டன. 1997 கம்யூனிச கொள்கையிலிருந்து விலகி ஜனநாயக முறைக்கு மாற்றம் ஏற்பட்டு தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது. 

பல்கேரியா ஆரம்பத்தில் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. விடின்ஸ்கி (மேற்கு) மற்றும் டார்னோவஸ்கி (கிழக்கு) இராச்சியங்கள். 1393 ஆம் ஆண்டில் டார்னோவோவின் “அரச நகரம்” ஒட்டோமன் துருக்கியரால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. 1396இல் கடைசியாக பல்கேரிய நிலங்கள் வீழ்ச்சியடைந்தன. பல்கேரிய பிரபுத்துவமும் மதகுருக்களும் படையெடுப்பாளர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். ஒரு சிலர் நாடுகடத்தப்பட்டனர். இது பல்கொரிய வரலாற்றின் இருண்ட காலமாகக் கருதப்படுகின்றது. இது ஐந்து நூற்றாண்டுகளாகக் தொடர்ந்தது. பல்கேரியர்களின் எழுச்சிகள் மேற்குத் துருக்கியர்களின் ஆக்கிரமிப்பு அபிலாi~களுக்குத் தடையாக இருந்தன. அந்த நேரத்தில் ஐரோப்பா அமைதியாக அதன் மறுமலர்ச்சியை அனுபவித்துக் கொண்டிருந்தது.

பல்கேரிய சுதந்திரபோராட்டம் என்பது ரஸ்யா – துருக்கி போரில் (1877-1878) தொடர்ச்சியான நிகழ்வுகள் ஆகும். இது 1878 மார்ச் 3 “சான் ஸ்டெபனோ” ஒப்பந்தத்pன் கீழ் பல்கேரியாவை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக மீண்டும் ஸ்தாபிக்க வழிவகுத்தது. பீட்டரால் எழுதப்பட்ட இவ்ஒப்பந்தம் ஒட்டோமன் துருக்கி பேரரசை 14ஆம் நூற்றாண்டில் கைப்பற்றிய பல்கேரியாவின் பெரும்பகுதியை பல்கேரியாவிற்கு திருப்பித் தருமாறு கட்டாயப்படுத்தியது. அதே ஆண்டின் பேர்லின் காங்கிரஸில் பேர்லின் உடன்படிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி சான் ஸ்டெபனோ ஒப்பந்தத்pன்படி நிறுவப்பட்ட பல்கேரிய அரசின் பிரதேசங்கள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. முதல் பகுதி சுயாதீனமாக செயற்பட்டது எனினும் ஒட்டோமன் துருக்கியின் கீழ் அடிமையாக காணப்பட்டது. இரண்டாம் பகுதி ஒட்டோமன் பேரரசின் தன்னாட்சி மாகாணமாக இருந்தது. மூன்றாவது பகுதியான மாசிடோனியா மற்றும் லோசன்கிராட் அனைத்தும் ஒட்டோமன் பேரரசிற்கு மீட்டமைக்கப்பட்டன. 1908 ஆம் ஆண்டு வரை பல்கேரியா தனது சுதந்திர பிரகடனத்தை அறிவிக்கும் வரை ஒட்டோமன் துருக்கி பேரரசின் கீழ் இருந்தது.

18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பல்கேரிய தேசிய மறுமலர்ச்சியின்  சகாப்தம் தொடங்கியது. ஒரு சுயாதீன தேவாலயத்திற்கான போராட்டம், புத்தகங்களை வெளியிடுதல் அதேபோல் பல்கேரிய மொழியில் குறிப்பிட்ட கால இடைவெளிகள் மதச்சார்பற்ற பல்கேரிய பள்ளிகளை நிறுவுதல், மொழி மற்றும் கலாசாரத்தை அதிகாரபூர்வமாக்குதல் ஆகிய அனைத்தும் ஒரு தேசத்தை உருவாக்குதற்கான படிகளாகும். 

“ஸ்லாவிக் பல்கேரியரின் வரலாறு” எனும் நூலினை பைஸ்னியா ஹிலெண்டர்ஸ்கி 1762இல் எழுதினார். சர்ச்  தேசிய போராட்டம் துருக்கிய அரசாங்கத்தை பல்கேரியர்களை ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்க கட்டாயப்படுத்தியது. நீலா மடாலயம் பல்கேரியாவின் ஆன்மீக மையமாகக் காணப்பட்டது.

பல்கேரிய தேசிய மறுமலர்ச்சியின் சகாப்தத்தில் அரசியல் விடுதலைக்கான இயக்கம் தொடங்கியது. 1869ஆம் ஆண்டில் பல்கேரிய புரட்சிகர மத்திய குழு புக்கரெஸ்டில் நிறுவப்பட்டது. இது ருமேனியாவின் பிரதேசத்திலிருந்து ஒரு மக்கள் எழுச்சியை ஏற்படுத்த வழிவகுத்தது. அதன் முக்கிய நபர் வாசில் லெவஸ்கி (1837- 1873) பல்கேரியரின் தேசிய வீராங்கனை “ சுதந்திரத்தின் தூதர்” என்று அழைக்கப்பட்டார். பல ஆண்டுகளாக ஒட்டோமன் துருக்கி பொலிஸாரால் தேடப்பட்ட புத்திசாலித்தனமான புரட்சியாளர் இவர். எனினும் செர்பியாவில் பிடிபட்ட தூக்கிலிடப்பட்டார். ஒட்டோமன் துருக்கி ஆட்சிக்கு எதிரான ஏப்ரல் புரட்சி (1876) பல்கேரியரின் தேசிய விடுதலை இயக்கத்தில் ஒர் திருப்புமுனையாக இருந்தது. திரேஸ் பிராந்தியத்தில் இந்த விடுதலை இயக்கத்தில் ;இருந்த ஆயிரங்கணக்கான புரட்சியாளர்கள் பல்கேரியாவுக்காக தங்கள் உயிரை டிகாடத்தனர். அவர்கள்pல் தேசிய கவிஞர் “ரிஸ்டோ போடேவ்” உள்ளடங்குவார். 

1877 முதல் பல்கேரிய இளவரசனான சாக்ஸ் கோபர்கொட்டின் ஃபெர்பினாண்ட் துருக்;கியிலிருந்து சுதந்திரத்தை அறிவித்ததை தொடர்ந்து 1878 இல் மார்ச் 3 இல் பல்கேரிய சமாதான உடன்படிக்கையின் மூலம் சுதந்திரம் அடைந்தது.  முதலாவது போல்கன் போரில் கைப்பற்றிய பிரதேசங்களை வென்றவர்களுக்கிடையே எப்படிப் பகிர்ந்த கொள்வது? அதைப்பற்றி இலண்டன் பொருத்தணை ஒன்றும் கூறவில்லை. 

துருக்கியிலுள்ள ஒட்டோமன் பேரரசின் அலுவல்கள் சம்பந்தமாக முடிவு காணும் உறுத்pக்கு அப்பொருத்தணை ஐரோப்பாவின் பொதுமாத்திரையை மட்டும் இட்டது. ஆனால் நயமடைந்தோரிடையே அந்நயங்களை எப்படிப்பிரித்துக் கொள்வது. அவர்களுக்கிடையிற் காரமான விவாதங்கள் விளைந்தன. இது இரண்டாம் போல்கன் போருக்கு வழிவகுத்தது. ஆதலால் 1913 யூன் மாதம் 2ஆம் திகதி சேர்பியாவும் கிரீசும் பல்கேரியாவுக்கு விரொதமாகக் தற்காப்பு நட்புறவை நிறைவேற்றின. 29 ஆம் திகதி பல்கெரியர் சேர்பியரைத் தாக்கினர். சேர்பியரும் கிரேக்கரும் பல்கேரியரைப் பின்வாங்கி ஓடச்செய்தனர். நட்புறவாளர்களுக்கிடையில் நடந்த இந்தப் போரில் இரு கட்சியினரும் கோரமான கொடிய செயல்களைச் செய்தனர். பின்னர் வேறொரு முனையிற் பல்கேரியாவைத் தாக்கினர். யூலையில் 9 ஆம் திகதி ருமேனியரும் இப்போரிற் சேர்ந்து சிலித்திரியாவைன் கைப்பற்றி சேபியா மீது அணிவகுத்துச் சென்றனர். இந்த நல்வாய்ப்பைத் துருக்கி தவறவிடவில்லை.

துருக்கியர் யூலை 12ஆம் திகதி பெரிதும் நெருக்கப்பட்ட பல்கேரியரைத் தாக்கி எரித்திரியாநோபிளைத் திருப்பிக் கைப்பற்றினர். படுதோல்வியடைந்த பல்கேரியர்  பரிவுகாட்டும்படி கதறினர். யூலை 3ஆம் திகதி படைத்தகைவு நிறைவேற்றப்பட்டது. ஓகஸ்ட் 10ஆம் திகதி அமைதிப் பொருத்தனை புகரேட்டிற் கைச்சாத்திடப்பட்டது. சிலித்திரியா என்னும் முக்கியமான கோட்டை ஒட்படத் தொபரூசாப் பிரிவிற் பெரிய துண்டொன்றையும் பல்கேரியா உருமேனியாவிற்கு கையளித்தது. ஏறத்தாழ மசிடோனியா முழுவதிலும் பல்கேரியாவிற்கிருந்த உரிமைகளை அது கைவிட்டது. மசிடோனியாவை சேர்பியாவும் கிறீசும் பங்கிட்டன. கிரிசு எபிரேசு பகுதியைப் பெற சேர்பியாவும் மொன்டிநீக்ரோவும் நோவி பசார் என்னும் பகுதியைப் பகிர்ந்தன. துருக்கியர் பல்கேரியாவிலிருந்து எத்திரியானோபிளைப் மீண்டும் பெற்றனர். மூன்று போர்களிலும் துருக்கி நாற்பது இலட்சம் மக்களை இழந்தது. அதன் 65,350 சதுரமைல் நிலப்பரப்பு 10,882 சதுர மைலாகச் சுருங்கிற்று. சேர்பியாவின் குடித்தொகை 50 சதவிகிதமாய் அதிகரித்தது. அதன் ஆள்புலம் இதனிலும் கூடியது. கிரிசே எல்லா நாடுகளிலும் கூடிய தோயமடைந்தது. மொண்டிநீக்ரோ போல் அதன் குடித்தொகையும் ஆள்புலமும் ஏறத்தாள இரட்டித்தன. இம்புரோசும் தெனதோசும் தவிர்ந்த ஈஜியன் தீவுகளும் கிறீற்றும் கிரிசுக்கு அளிக்கப்பட்டன. உரோட்சு உட்படத் தாதக்கனீசை இத்தாலி தன்னிடம் வைத்துக்கொண்டது. 

ஒட்டோமன் ஆட்சியுடன் பல்கேரியாவின் முறிவைக் குறிக்கும் 1908 ஆம் ஆண்டு அறிவிப்பானது பல்கேரியாவின் இரண்டாவது விடுதலையாகும். 1908 ஆம் ஆண்டில் பல்கேரியா இளவரசர் ஃபெர்எனாண்ட் அரச பட்டத்தை எடுத்துக் கொண்டபோது சுதந்திரத்தை நோக்கி சென்றது. 

முதலாம் உலகப்போரில் ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா, ஹங்கேரி தரப்பில் பல்கேரியா பங்கேற்றது. ஆகால் பேரழிவில் முடிந்தது. 1919 முதல்  ஏற்படுத்தப்பட்ட சமாதான ஒப்பந்தம் பல்கேரியா மீது கடுமையான விதிமுறைகளை விதித்தது. இதனால் ஈஜியன் கடலை இழந்தது. 1919 முதல் ஏற்படுத்தப்பட்ட சமாதான ஒப்பந்தம் பல்கேரியா மீது கடுமையான விதிமுறைகளை விதித்தது. இதனால் ஈஜியன் கடலை இழந்தது. வெஸ்டர்க் திரோஸ் கிரேக்கத்தின் ஒரு பகுதியாக தெற்கு டோப்ருஜா ருமேனியாவுக்குச் சென்றது. மற்றும் ஸ்ருட்மிகா, போஸ்ன்லெக்ராட் மற்றும் சாரிப்ரோட் ஆகியவற்றின் சுற்றுப்புறங்கள் குரோடிய, டஸ்லோவேனியன் இராச்சியத்திற்கு வழங்கப்பட்டன.

1944 செப்டம்பர் 04 அன்று தேசபக்தி முன்னணியின் அரசாங்கம் நாட்டில் நிறுவப்பட்டது. பல்கேரியா ஜனநாயக சக்திகளின் பக்கம் ஹிட்லர் எதிர்ப்பு கூட்டணியில் இணைந்தது. போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரங்கணக்;கான பல்கேரியர்கள் இறந்தனர். 1946 செப்டம்பர் 15 இல் சோவியத் ஒன்றியத்தின் வெற்றியின் பின்னர் பல்கேரியா ஒரு குடியரசாக அறிவிக்கப்பட்டது. பல்கேரிய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்து சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்டது. தேசியமயமாக்கல் மற்றும் கூட்டுமயமாக்கல் முறை ஏற்படுத்தப்பட்டது. பல்கேரிய சோவியத் முகாமை என்று அழைக்கப்படும் ஒரு பகுதியாக மாறியது. 1989 நவம்பர் 10 பல்கேரியாவில் ஜனநாயக மாற்றத்தின் தொடக்கத்தை குறித்தது. ஒரு புதிய அரசியலமைப்பு 1991இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசியல் கட்சிகள் மீட்டெடுக்கப்பட்டன. சந்தை பொருளாதாரம் உருவாக்கப்பட்டது. 2004 இல் பல்கேரியா நேட்டோவின் உறுப்பினரானது. 2007 இல் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினரானது.


SK SANJU 

EUSL                                                                                                                                                                                                    



1800 – 2000 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கைப் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்திய காரணிகள்

இலங்கையின் பொருளாதாரத்தினை பொதுவாக அபிருத்தியடைந்து வரும் அல்லது குறைவிருத்திப் பொருளாதாரம் என வரையறை செய்வது மரபாகும். அத்துடன் இலங்கையின் ...