Thursday 18 June 2020

இன்றைய இளைஞர்களும் வடக்கின் எதிர்கால அரசியலும்

                             
     
இன்றைய இளைஞர்களே! நாளைய தலைவர்கள் எனும் கூற்றுக்கு இணங்க தற்போது  இளைஞர் சமுதாயம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது? அவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினை என்ன? அதற்கான உரிய தீர்வு தான் எட்டப்படுகின்றதா?
 
இன்றைய இளைஞர்கள் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்? முன்னைய தலைமுறை இளைஞர்களையும் இன்றைய தலைமுறை இளைஞர்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். எந்த தலைமறை இளைஞர்கள் அதிகம் வசதி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்பது எமக்கே புரியும். அந்தவகையில் இணையத்தளம்இ ஸ்மாட்போன் போன்ற பல சாதனைகளையும் கையாளுகின்ற வாய்ப்பினை பெற்றுக் கொண்டுள்ளனர். இருப்பினும் என்ன பயன்? அவர்கள் சமூகத்தில் நற்பிரiஐயாக வளர்கின்றார்களா? இல்லவே இல்லை. நூற்றுக்கும் ஐம்பது வீதமான இளைஞர்கள் தமது பாதையினை மிகத் தவறாகவே தேர்ந்தெடுத்துள்ளனர். “காற்றிலே பறந்து போகும் காகிதம் போல” இன்றைய இளைஞர்கள் மனம் போன போக்கில் சென்றுக் கொண்டிருக்கிறார்கள் . சிலர் போதைவஸ்து அடிமைகளாக! சிலர் சமூகத்தின் விரோதிகளாக!

    பிரச்சினைகள் என்பது எல்லா மட்டத்திலும் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கின்றன. இதற்கு இளைஞர்கள் மாத்திரம் விதிவிலக்கல்ல. அவர்களும் சமூகத்தில் பல பிரச்சினைகளுக்கும் இன்னல்களுக்கும் முகம் கொடுக்கவே செய்கின்றனர். இன்றைய இளைஞர்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாக அதிலும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தான் போதைவஸ்துக்கு அடிமையாதல். குறிப்பாக புகைபிடித்தல் தொடக்கம் மதுபானம் அருந்துதல் மற்றும் ஹொரொயின் பாவனை வரை இன்றைய இளைஞர்கள் அடிமையாகியுள்ளனர்.

    இந்த நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லப்படுகின்ற இளைஞர்கள்இ யுவதிகள் ஏன் போதைவஸ்துக்கு அடிமையாகுகின்றார்கள். அந்தவகையில் இளைஞர்கள் போதைப் பொருளில்இ முறையற்ற காதல் விவகாரங்களில் மற்றும் கையடக்க தொலைபேசி வழியாக சமூக ஊடகங்கள் வழியாக ஆபாச வீடியோக்களில் மூழ்கிருக்கும் இளைஞர்கள் எமது மக்களுக்காகஇ எமது சமுதாயத்திற்காக அல்லது தங்களுக்காகவேனும் எதைச் சாதிக்க போகின்றார்கள் என்று நினைத்ததுண்டா? சரி பிழையான வழியில் செல்லும் அவ்இளைஞர்களை திருத்தி வழிகாட்டி சிறந்த ஆலோசனைகளை கூறி நாட்டின் பயனுள்ள மனிதராக சமுதாயத்தில் மதிக்கத்தக்கவராக மாற்ற யாராவது நினைத்ததுண்டா?

    இவ்வாறு இன்றைய இளைஞர்கள் போதைவஸ்துக்கு அடிமையாக்கப்பட்டால் நாளைய சரித்திரம் அவர்களை எவ்வாறு தூற்றும் என எண்ணிப்பாருங்கள். இளைஞர்கள் போதைவஸ்துக்கு அடிமையாகுவதற்கு என்ன காரணம்? குறிப்பாக வடக்கில் போதைக்கு அடிமையாகும் இளைஞர் வர்க்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு நாட்டின் உந்து சக்தியாக விளங்கும் இளைஞர்கள் இவ்வாறு போதைக்கு அடிமையாகில் நாளை நாடு சுடுகாடு ஆகிவிடும். ஒரு நாட்டினை அழிப்பதற்கு கொரோனா வைரஸ் தேவையில்வை. அதைவிட பன்மடங்கு சக்தி வாய்ந்தது தான் அந்த போதைவஸ்து.  இவ்வாறு ஒவ்வொரு இளைஞர்களும் போதைவஸ்துக்கு அடிமையாக்கப்பட்டால் நாடு முழுவதும் துன்பத்தில் அல்லல்பட வேண்டியிருக்கும்.

    அந்தவகையில் இளைஞர்களின் ஆளுமையை அழிப்பதற்கும் அவர்களை உளரீதியாக அழிப்பதற்கும் மிக பெரிய சக்தியாக விளங்குவது இந்த போதைவஸ்து எனவே போதைவஸ்துக்கு அடிமையாக்கப்பட்ட இளைஞர்களை மீட்டெடுப்பது எவ்வாறு?

     இன்றைய இளைஞர் சமுதாயம் போதைவஸ்து மட்டுமல்ல தொழிலின்மை பிரச்சினையும் தான் எதிர்கொள்ளுகின்றனர் இப்பிரச்சினையானது கற்றோர் மத்தியில் அதிகம் காணப்படுகின்றது தனது கல்வி தகைமை மற்றும் திறமைக்கும் ஆற்றலுக்கும் பொருத்தமான தொழில் என்ன என்பதை இனங்கான உள்ள பிரச்சினையே வேலையின்மை பிரச்சினைக்கு காரனமாக அமைகின்றது இலங்கையில் பாடசாலை மற்றும் பல்கழைக்கழகங்களில் கற்கும் கல்விக்கும் தொழிலுக்கும் இடையில் தொடர்பு குறைவாக காணப்படும் நிலையில் பாடசாலை மற்றும் பல்கழைக்கழகங்களில் தொழிலுக்கு வழிகாட்டல் வேண்டும் அவை மட்டும் போதாது தொழிலினை பெற்று கொடுப்பதற்கு


எம் வடக்கு அரசியல்வாதிகளும் கட்சிகளும் முன்வர வேண்டும் ஆனால் அவ்வாறு முன்வருவது யார்? எக்கட்சி? என்பது தொடர்பில் யோசிக்கும் போது எமக்கு சிரிப்புத்தான் வரும். இவ்வாறு தொழிலற்ற இளைஞன் யுவதிகளுக்கு மாற்று தீர்வு ஏதாவது எமது வடக்;கு அரசியல்வாதிகள் முன்வைத்துள்ளார்களா? இளைஞர்களுக்கு மகிழ்ச்சியானதும் சுகமானதும் மற்றும் உற்பத்தி திறனும் கொண்ட வாழ்க்கைக்குரிய சேவைகளை வழங்குவதுடன் அதன் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்கு எம் தமிழ் அரசியல் வாதிகள் முன்வருகின்றார்களா?

       சும்மா கடமைக்காகவும் வாக்கினை பெற்றுக்கொள்வதற்காகவும் ஆட்சி பீடம் ஏறும் தமிழ் அரசியல்வாதிகள் மேடைப்பேச்சிகளிலும் பத்திரிகை கூட்டத்திலும் இளைஞர்களுக்கான தீர்வு தமிழ் மக்களுக்கான தீர்வு என்று பிரச்சினைகளை தீர்வுகளை  காகம் கரைவது போல் கரைந்து கொண்டிருந்தால் இளைஞர்களின் தற்கால பிரச்சினைகள் தான் தீர்ந்து விடுமா?

       இன்றைய மானவர்கள் பொதுவாக வடக்கு மாணவர்கள் ஒரு காலகட்டத்தில் கல்வியில் சிறந்து விளங்கினார்கள். சிறந்த கல்வியும் கற்பித்தல் முறையும் வடக்கில் காணப்பட்டது. ஆனால் தற்போதைய நிலை என்ன? எங்கு சென்றுகொண்டிருக்கிறார்கள் எமது தமிழ் மாணவர்கள். வட மாகாணத்தின் கல்விநிலை கடந்த வருடங்களாகவே 9ஆவது மாகாணமாக இருப்பது தமிழ் மாணவர்கள் கல்வியில் இருக்கும் எந்த நிலையினை குறிக்கின்றது.

    2009ஆம் ஆண்டிற்கு முன்னர் முதல் ஐந்து இடங்களில் காணப்பட்ட வடக்கு மாகாணம் இன்று ஏன் இந்த நிலையை அடைந்துள்ளது என்பதை சற்று எண்ணிப்பாருங்கள். ஏன் கல்வி துறையை சார்ந்தவர்கள் எண்ணிப்பார்க்க தவறிவிட்டனர். இலங்கையின் மூளை என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் இன்று கல்வி மட்டத்தில் என்ன நிலையில் இருக்கிறது.

    அன்று யுத்த காலத்தில் வடக்கில் பொருளாதார தடைஇ ஆசிரியப்பற்றாக்குறைஇ வகுப்பறை கட்டிடங்கள்இ ஆய்வுகூடங்கள் மற்றும் தளபாடங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதியின்மைஇ போக்குவரத்து தடை போன்ற பாதகமான சூழ்நிலையில் அரசியல் வாதிகளின் தலையீடு இன்றி விடுதலைப்புலிகளின் அறிவுறுத்தல்களில் அன்று சிறப்பாக காணப்பட்ட கல்வி இன்று தரம் கெட்டுப்போகக் காரணம் என்ன? எனவே இழந்து போய்க் கொண்டிருக்கும் எமது கல்வியை மீளக்கட்டி எழுப்புவதற்கு தமது கல்விச்சமூகமும்இ அரசியல்வாதிகளும் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறார்கள்? என்பதை நாம் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

    எமது நாட்டின் 30வருட கால கொடூர போர் முற்றுப் பெற்று ஒரு தசாப்த காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்போர் முற்றுப் பெற்று என்ன பயன் எம் இன மக்களுக்கு. போரின் வடுக்களும் இழப்புக்களும் இன்னும் எம்முடனே பயணித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு ஆயதப்போர் என்றால் சிறுவர்கள் பெண்கள் தொடக்கம் முதியோர் வரை அனைவரும் பெரும் சேதங்களையே சுமக்கின்றனர். முக்கியமாக இவர்களுக்கு அடுத்ததாக முன்னாள் போராளிகள் என்ற ஓர் சமூகம் எம்மவர் மத்தியில் கடும் உடல்இ உள அழுத்தங்களுடன் பொருளாதார ரீதியாக வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட நிலையில்இ யாகசம் செய்பவர்களாக. பைத்தியக்காரர்களாக சுற்றித் திரிகின்றனர். அன்று விடுதலை போராளிகளாக தலைநிமிர்ந்து எம்மவர் மத்தியில் வாழ்ந்தவர்கள் இன்று வீதி ஓரங்களில் யாகசம் செய்பவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கான தீர்வு என்ன? யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள்இ யுவதிகள்இ முன்னாள் போராளிகள்இ அங்கவீனம் உற்றவர்களுக்கு அரசியல்வாதிகள் முன்வைத்திருக்கும் தீர்வு என்ன?

    யுத்தத்pனால் பாதிக்கப்பட்ட கைஇ கால்களை இழந்தவர்களும் இடுப்புக்கு கீழே உணர்வு அற்ற முன்னாள் போராளிகள் தினம் தினம் வாழ்வதா? சாவதா? எனப்போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பலர் இயற்கை கடன்களை கழிக்க முடியாமல் அடுத்தவரின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல சில போராளிகளுக்கும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அங்வீனம் உற்றவர்களுக்கும் உழைக்கும் திறன் இருந்தும் குடும்பத்தை காப்பாற்றக்கூடிய தொழில்வாய்ப்பு இன்றி பட்டினியில் வாடுகின்றனர்.

    அவ்வாறு உழைப்பாதாக இருந்தாலும் கடலில் மீன்பிடித்தும் விறகு வெட்டியும் வரும் வருமானம் குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்குமா? என்பதை விலைவாசி உயர்ந்த நிகழ்காலத்தில் நாம் சிந்தித்துப் பார்க்கத்தான் வேண்டும்.


இவ்வாறு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அங்கவீனமுற்றவர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் யாருக்காக தன்னையும் தன் குடும்பத்தையும் துறந்து பொதுநலனுக்காக போராடினார்கள் என்பதை எம்தமிழ்மக்கள் சற்று உணர்ந்து பாருங்கள். தற்போது இலங்கையில் கொரொனாவின் தாக்கத்திற்கு பயந்;து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டத்தினால் 3 நாட்களுக்கே வீட்டில் முடங்கி இருப்பது கஸ்டம்இ பைத்தியம் பிடிப்பது போன்ற உணர்வு இருக்;கும் போது எமக்காக உயிர் தியாகத்தை மேற்கொள்ள துணிந்த முன்னாள் போராளிகள் வடக்கில் உள்ள அங்கவீனமுற்ற இளைஞர்கள் இன்று வாழ்நாள் முழுவதும் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை நாம் என்னவென்று எண்ணுவது.

வடக்கில் தனி ஈழம் கோரி நடந்த போராட்டத்தில் பல இளைஞர்கள் யுவதிகள் இணைந்து விட்டார்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர்களுக்கு நாம் செய்தது என்ன? செய்த கொண்டிருப்பது என்ன? ஆட்சியினை கைப்பற்றிய அரசியல்வாதிகள் தமிழ் உணர்வு மிக்கவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டு மாவீரர் தினத்தினை பல சிரமங்களுக்கு மத்தியில் முண்டியடித்துக்கொண்டு கொண்டாடுவதன் பயன் தான் என்ன? அப்போரில் ஈடுபட்டு தற்போது ஒரு வேளை உணவுக்காக கையேந்தும் இப்போராளிகளுக்கும் சாவின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் அங்கவீனர்களுக்கும் வடக்கு அரசியல்வாதிகள் ஒரு வாழ்வாதார தொழிலை ஏற்படுத்திக் கொடுத்தாலே மாவீரர் தினம் கொண்டாட்டத்தின் போது அந்த மாவீரர்களே மனம் மகிழ்வார்களே! அதை விடுத்து அரசியல்வாதிகள் பாசாங்கு செய்வதன்  பயன்தான் என்ன?

அதுமட்டுமல்ல யுத்தத்தினால் பல இளைஞர்கள்கள்இ சிறுவர்கள்இ பெரியோர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காகவே வவுனியாவின் பல நாட்களாகவே போராட்டம் நடத்தி வருகின்றனர். வடக்கில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவர்களுக்கான தீர்வு இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. இவர்களுக்கான தீர்வு தான் எட்டப்படுமா? வாழ்வின் இறுதிவரை எத்தனை யுகங்கள் தான் இவ்வாறு போராட்டம் நடத்திக் கொண்டிருப்பார்கள் என்பதை தமிழ் மக்களாகிய நாம் சிந்தித்து பார்க்கத்தான் வேண்டும்.

ஈழப்போரில் விடுதலைபுலிகளுக்கு எதிராக போரிட்ட சிங்கள இராணுவ வீரர்களும் அங்கவீனமுற்றார்கள் தான். அவர்களுக்கு எட்டிய தீர்வு ஏன் இன்னும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களாகிய முன்னாள் போராளிகளுக்கு அங்கவீனமுற்றவர்களுக்கு எட்டப்படவில்லை என என்றாவது எம் தமிழ் அரசியல்வாதிகள் நினைத்திருப்பார்களா?
இவ்வாறான பல்வேறு பிரச்சினைகளால் எமது வடக்கின் இளைஞர்களின் சக்தி வீணடிக்கப்படுவதுடன் சமூக பொருளாதாரத்தில் இருக்கின்ற ஏற்றத்தாழ்வினையும் அதிகரித்து வருகிறது. சமூகத்தின் இயங்கு சக்திதான் “இளைஞர்கள்”இ நாட்டின் பலம் தான் “இளைஞர்கள்”.

இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கிறது. ஒன்றில் ரயில் வராது. மற்றொன்றில் அடிக்கடி ரயில் வரும். ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை வினையாடிக் கொண்டிருக்கிறது. ரயில் வரும் தண்டவாளத்தில் பத்த குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது. அத்தருணம் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ட்ராக் எமக்கு அருகிலேயே உள்ளது. நாம் என்ன செய்வோம் (நாம் திரைப்படங்களில் காட்டப்படுவது போல் சுப்பர் மேன் இல்லை) ஒரு குழந்தை விளையாடும் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றிவிடுவோம். ஏன்? 10 குழந்தைகளை காப்பாற்றி விடுவதற்காக.

அன்றைய சமூகமும் இப்படித்தான் ரயில் வரும் என தெரிந்தும் தப்பு செய்யும் குழந்தைகள் காப்பாற்றப்படுகிறார்கள். ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தப்பே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது. இன்றைய சூழலில் எமது வாழ்க்கையும் அரசியலும் இப்படித்தான் இருக்கிறது.

எனவே இளைஞர்கள் நாட்டின் அச்சாணிகள். சுபீட்சத்தின் ஒளிகள். இன்றைய இளைஞர்கள் தங்களது சக்தியை நல்வழியில் பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சியில் பங்கு கொள்ள வேண்டும். இளைஞர்களாகியவர்கள் நாட்டினை சிறந்த முறையில் நேரிய பாதையில் வழிநடத்திச் செல்ல வேண்டும். இன்றைய இளைஞர்கள நாளைய தலைவரகள் என்ற கூற்றிற்கிணங்க வருங்கால அரசியலை சிறந்த தலைமைத்துவ பண்புமிக்க இளைஞர்களிடம் தான் கையளித்துப் பாருங்கள். நாடு விடியலை நோக்கிச் செல்லும்.

எனவே எமது வடக்கு இளைஞர்களின் மற்றும் தமிழ் மக்களின் தீர்வுகள் எட்டாக்கனிகளாக இருக்கும் இந்நிலையில் எமது தமிழ் சமூகத்திற்கு சிறந்த தலைமைத்துவமும் சிறந்த ஆளுமையும் கொண்ட இளைஞர் அணிகள் அவசியம். ஜனநாயகம் சிறந்த விளங்குவதற்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நாம் சிறந்த தலைவர்களை தேர்தெடுக்க வேண்டும். ஐந்துக்கும் பத்திற்கும் ஆசைப்பட்டு எமது வாக்கினை வீணடிக்காமல் சிறந்த தலைவரை தேர்வு செய்வது எம் தமிழரின் கடமையாகும்.

சுரேஸ்குமார் சஞ்சுதா
   









            
         


No comments:

Post a Comment

1800 – 2000 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கைப் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்திய காரணிகள்

இலங்கையின் பொருளாதாரத்தினை பொதுவாக அபிருத்தியடைந்து வரும் அல்லது குறைவிருத்திப் பொருளாதாரம் என வரையறை செய்வது மரபாகும். அத்துடன் இலங்கையின் ...