Friday 19 June 2020

சோவியத் ரஸ்யாவின் சோசலிசத்தின் வீழ்ச்சியும் சீனாவில் சோசலிசமும்



 


ரஸ்யாவில் சோசலிசப் புரட்சி வெற்றி பெற்று உலகமெங்கும் பரவியது. ரஸ்யா தலைமையில் சோசலிசமும் அமெரிக்கா தலைமையில் ஜனநாயகமும் பனிப்போராக விருத்தி கண்டது. இவ்விரு அரசியற் பொருளாதார கோட்பாடுகள் உலகமெங்கும் விதைக்கப்பட்டது. இதன் விளைவு தான் சீனாவில் மாவோ தலைமையில் சமவுடமை அரசு நிலைபெற்றது. 1940 களில் சீனா ஒரு பின்தங்கிய விவசாய நாடாக காணப்பட்டது. அங்கு பெரும் தொழிற்;சாலைகளோ தொழிலாளர்களோ இல்லை. மாவோ அங்கு விவசாயிகளை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக சமவுடைமை புரட்சியை முன்னெடுத்து வெற்றி கண்டார்.

அடிப்படையில் ரஸ்யா வளங்கள் நிறைந்த நாடு. அங்கு விவசாயமும் தொழிற்சாலைகளும் கனிமவளங்களும் நிறைய உண்டு. குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறைந்த நாடு. ரஸ்யாவின் பொருளாதாரம் வலுவான நாடாக இருந்திருக்க வேண்டும். ஆனால் சோசலிசக் கொள்கைகளே அதனை அதாள பாதாளத்திற்கு தள்ளியது. சோசலிசத்தின் முக்கிய அம்சமாக உற்பத்தி சாதனங்களின் அரசு உடைமை, கூட்டு விவசாயம் மற்றும் மையப்படுத்தப்பட்ட நிர்வாகத் திட்டமிடல் இவை ஒரு சில தசாப்தங்களாக சோவியத் யூனியனின் பொருளாதாரத்தை உயர்த்தியது. இரண்டாம் உலகப்போர் முடிந்தபின் மேற்கத்திய நாடுகளோடு பனிப்போர் தொடங்கியது. அப்போது சோவியத் யூனியன் அணு ஆயுத உற்பத்தி மற்றும் விண்வெளிப்போட்டியில் ஈடுபட்டது.

1960 – 70 சமயத்தில் மத்திய திட்டமிடல், கூட்டு விவசாயம் போன்றவை சோவியத் யூனியனின் உற்பத்தித் திறனை பெருமளவு குறைத்தது. குறிப்பாக 1970க்கு மேல் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை வாயுவின் விலை ஏற்றத்தாலேயே சோவியத் யூனியனின் பொருளாதாரம் மேலே இருந்தது. கம்யூனிஸ்ட் ஆட்சி முறைமையினால் அவர்கள் பொருளாதாரத்தில் இருந்த பலவீனங்கள் மறைக்கப்பட்டது. சோசலிசப் பொருளாதாரத்தில் இருந்த பலவீனங்களை நன்கு புரிந்துக்கொண்ட அதிபர் மிக்கைல் கோர்பச்சேவ் 1985இல் பொருளாதார தாராளமயமாக்கல் செய்ய முற்பட்டார். ஆனால் திட்டமிட்ட பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட சோசலிசம் அவருடைய தாராளமயமாக்கல் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டது. முடிவில் சோவியத் யூனியன் சுக்குநூறாக நொறுங்கியது. சோவியத் யூனியனின் அரசியல் பொருளாதாரம் அந்த நாட்டை வீழ்த்தியது. இதனாலே அங்கு சோசலிசம் வீழ்ச்சியடைந்தது. அந்தவகையில் தீர்க்க முடியாத பொருளாதார பிரச்சினை, அரசியலில் மக்களுக்கு உரிமை வழங்கப்படவில்லை, அந்நாட்டின் இராணுவ செலவுகள் எல்லை மீறி போனமை, அமெரிக்காவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான பனிப்போர் அதனுடைய பொருளாதார சக்தியை சிதைத்தமை போன்ற காரணங்களால் ரஸ்யாவில் சோசலிசம் வீழ்ச்சியடைந்துக்கொண்டது. அந்தவகையில் சோசலிசத்தின் தோற்ற நாடான ரஸ்யாவில் வீழ்ச்சியடைந்தாலும் சீனாவில் நிலைத்திருப்பதற்கான காரணங்களை நோக்குவோம்.

சோசலிசத்தின் மிகப்பெரிய கொள்கைவாதிகளில் ஒருவராக மாவோ உள்ளார். அவர் சீன பொதுவுடைமைவாத கட்சியை தோற்றுவித்து 1949ஆம் ஆண்டு பொதுவுடைமைவாத புரட்சியை நிகழ்த்தினார். பொதுவுடைமைவாத கொள்கையில் சீனாவின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சில மாறுதல்களை மாவோ கொண்டு வந்தார். இதற்கு பொதுவுடைமைவாத சீனமயமாதல் என்பது பெயராகும்.

கால்மார்க்ஸ் தொழிற்சாலைகள் நிறைந்த, தொழிலாளர்கள் நிறைந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளில்தான் பொதுவுடைமைப் புரட்சிக்கு சாத்தியம் இருந்ததாகக் கூறினார். புரட்சியை தொழிலாளர்கள் தான் நடத்துவார்கள் என நம்பினார். ஆனால் 1940களில் சீன ஒரு பின்தங்கிய விவசாய நாடு ஆகும். தொழிற்சாலைகளோ, தொழிலாளிகளோ அதிகம் இல்லை. மாவோ விவசாயிகளை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக பொதுவுடைமைவாத புரட்சியை நடத்தினார். சீனாவில் மாவோவின் வெற்றி விவசாய நாடுகளான ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கு ஊக்கத்தை வழங்கியது.

லெனின் பொதுவுமைமைவாத கட்சியின் முன்னணியில் தொழிலாளர்கள் இருக்க வேண்டும் என்றார். மாவோ புரட்சியின் முன்னணியில் மக்கள் இருக்க வேண்டும் என்று கூறினார். பொதுவுடைமைவாத கட்சியின் கொள்கையிலும் போராட்டத்திலும் மக்கள் முக்கிய அங்கமாக இருப்பார்கள். “மக்களிடம் இருந்து மக்களுக்காக” என்பது மாவோவின் பொதுவுடைமைவாத கட்சியின் வழிகாட்டுக்கோட்பாடாக இருந்தது.
சுரண்டலுக்கு எதிரான சோசலிச புரட்சியில் மக்களுக்கு முக்கியத்துவத்தை மாவோ வலியுறுத்துகிறார். பல கோடிகணக்கான மக்களை நேரடியாக போரில் ஈடுபடுத்த மாவோ வாதிட்டார். ஏகாதிபத்தியமும் நிலப்பிரபுக்கள் முறையும் மக்களின் எதிரி என்று கூறினார். கிராமப்புற விவசாயிகளை ஒருங்கிணைத்து நகரங்களை கைப்பற்ற வேண்டும் என்பது மாவோவின் உத்தி ஆகும்.

மாவோ கொரில்லா போர் முறையைப் பின்பற்றினார். இந்த உத்தியில் மூன்று கட்டங்கள் உள்ளன. முதல் நிலையில் பொதுவுடைமைவாத தொண்டர்கள் பிரச்சாரம் மூலம் மக்களை கவர்வார்கள். இரண்டாம் நிலையில் பொதுவுடைமைவாத கட்சியினர் இராணுவ மற்றும் அரசாங்க நிறுவனங்கள் மீது தாக்குதல் நடாத்துவார்கள். மூன்றாம் கட்டத்தில் ஒரு வழக்கமான இராணுவமாக மாறி பொதுவுடைமை கட்சி கிராமங்களையும் நகரங்களையும் வெற்றிக்கொள்ளும். தேவைக்குத் தகுந்தவாறு இந்த மூன்று நிலைகளை பொதுவுடைமைவாத கட்சி பின்பற்றலாம்.

மாவோ 1950களில் சீன மக்களுக்கு கருத்து சுதந்;திரம் வழங்கினார். அதனை “நூறு மலர்கள் மலரட்டும், நூறு வகையான சிந்தனைகள் போட்டியிடட்டும்” என்ற வாசகத்தின் ஊடே மாவோ நடைமுறைப்படுத்தினார். நல்ல புதிய கருத்துகக்கள் பழைய தேவையற்ற கருத்துக்களைத் தோற்கடிக்கும் என மாவோ கூறினார்.

மாவோ பாட்டாளி வர்க்க கலாச்சார புரட்சியை 1965 – 1966 ஆம் ஆண்டு அமுல்படுத்தினார். பழைய கருத்துக்கள், பழைய கலாச்சாரம், பழைய வழக்கங்கள் ஆகிய “நான்கு பழையவைகள்” நீக்கத்திற்காக இப்புரட்சியைக் கொண்டு வந்தார். பொதுவுடைமைவாத கட்சி அரசாங்கம், இராணுவம், கலாச்சாரத்தில் தேவையில்லா சரத்துக்கள் புகுந்துவிட்டன. அவைகளை அகற்றி பொதுவுடைமையைக் காக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாகும். தொழில்மயம் ஆக்குவதையும் நிலம் மற்றும் தொழில் கூட்டுவாதத்தையும் அமுல்படுத்தி விரைவாக சீனாவை சமதர்ம அமைப்பாக மாற்ற மாவோ முயற்சித்தார். அனால் துரதி~;டவசமாக அவரது நடவடிக்கைகள் கொடிய பஞ்சத்தைக் கொண்டுவந்தது. பொதுவுடைமைவாத அரசை காப்பற்ற பொதுவுடைமையின் எதிரிகளை வீழ்த்துவதற்கு “சிவப்பு காவலர்கள்” உருவாக்கப்பட்டனர்.

மாவோ புதிய மக்களாட்சி என்ற கொள்கையைக் கொண்டுவந்தார.; அரசு ஏழைகளை சுரண்டும் பணக்காரர்களின்  ஆயுதம் என்ற மார்க்ஸிய கருத்தை மாவோ சிறிது மாற்றியமைத்தார். விவசாயிகள், தொழிலாளிகள், சிறிய முதலாளிகள், தேசிய முதலாளிகள் என்ற நான்கு வர்க்கங்களுக்காக புதிய மக்களாட்சியை உருவாக்கினார். பதிய மக்காட்சிக்கு மக்கள் மக்களாட்சி சர்வாதிகாரம் என்ற பெயரையும் அவர் சூட்டினார். இம்முறையில் தொழிலாளிகளுக்கும், விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சிறிய முதலாளிகளும் பெரிய முதலாளிகளும் அரசின் இளைய பங்குதாரர்களாக கருதப்பட்டனர். இந்த நான்கு வகை வர்க்கங்களுக்கும் அரசு மக்களாட்சியாக செயற்பட்டது. மற்ற வர்க்கங்கள் அரசின் எதிரிகளாக கருதப்பட்டனர். அவர்களை “ஏகாதிபத்தியத்தை இயக்கும் நாய்கள்” என்று மாவோ கடுமையாக வர்ணித்தார்.

இருபத்தியோராவது நூற்றாண்டில் கூட மாவோயிசம் பல மாற்றங்களுடன் சீனாவில் பின்பற்றப்படுகிறது. சீனாவின் தேசிய தலைவரான டெங் ஜியாபெங் 1978ஆம் ஆண்டிற்கு பிறகு சீனபொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தார். தாராளமயமாதல் சீனப்பொருளாதாரத்தில் முன்னுக்கு கொண்டுவரப்பட்டது. இருந்தபோதிலும் அரசியலில் சீன பொதுவுடைமைவாத கட்சி எல்லையற்ற ஆதிக்கத்தை தொடர்ந்து பெற்றிருக்கிறது.

சீனா முதலாளித்துவ பாதைக்குச் சென்று விட்டது என்று சிலர் வாதிடுகின்றனர். வேறுசிலர் சோசலிசத்திற்கு துரோகம் இழைத்துவிட்டதாக கூறுகின்றனர். இன்றும் சிலர் இதை சீனமாதிரியிலான சோசலிசம் என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். அந்தவகையில் சீனாவில் சோசலிசம் நிலைத்து நிற்க சீனாவின் விவசாயப் பிரச்சினையும் ஓர் காரணமாகும். சீனாவின் புரட்சிகரப்பாதைக்கு வழிவகுத்தவர் மாவோ. இவர் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு என்ற அணுகுமுறையிலிருந்து சீனாவின் புரட்சியை நிறைவேற்றினார். ஆனால் ஏகாதிபத்தியத்தையும் நிலப்பிரபுத்துவத்தையும் வீழ்த்திய பிறகு சீனாவில் சோசலிசம் நிறுவப்பட்டுவிட்டது என்று மாவோ என்றுமே நினைக்கவில்லை. சோசலிசக்கட்டு;மானத்தின் நீண்ட நெடிய இயக்கப் போக்கின் மிகவும் ஆரம்ப நிலையில் இருப்பதாக மட்டுமே எண்ணினார்.
சீனப்புரட்சி முடிவுக்கு வந்ததும் விவசாய நிலங்கள் தனியார்மயப்படுத்தவில்லை. இவை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை. விவசாய நிலங்கள் யாவும் அரசுக்கு சொந்தமாக இருந்தன. கிராம கம்யூன்களின் நிர்வாகத்தில் இருந்தன. நிலங்களின் உடமை கிராமபுற மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் ரஸ்யாவைப் பொறுத்தவரை நிலங்கள் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு அவர்களின் முழு உரிமையாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு நிலம் சரக்காக மாற்றியமைக்கப்பட்டன. அவற்றை வாங்கவும் விற்கவும் விவசாயிகளுக்கு உடைமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.


பின்னாளில் சீனாவில் விவசாய நிலங்கள் கூட்டுறவுமயமாக்கத்திற்கு விவசாய மக்களிடமிருந்து பெரிய எதிர்ப்பு எதுவும் எழவில்லை. ஆனால் ரஸ்யாவில் விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக ஸ்டாலின் காலத்தில் கூட்டுறவு மயமாக்கத்தை திணிக்க வேண்டியிருந்தது.


முதலாளித்துவ புரட்சியின் விளைவாக நிலங்கள் தனியார்மயமாக்கப்பட்டன. நிலங்கள் விவசயிகளுக்கு முற்றுரிமையாக்கப்பட்டன. இதுமட்டுமே லாபகரமானதாக் கருதப்பட்டன. நிலங்கள் பெரியளவிலான உற்பத்தியில் ஈடுபடும்போது மட்டுமே அதிக உற்பத்தி பெருகும் என்ற எண்ணம் பொதுவாக அப்போது நிலவிய நாடுகளிடம் இருந்தது. சிறிய அளவிலான விவசாய உற்பத்தியில் உற்பத்தியும் பெருகாது என்று எண்ணினார். இத்தகைய கோட்பாட்டை ரசியா ஏற்றுக் கொண்டு நிலங்களை தனியார்மயப்படுத்தியது. ஆனால் இந்தக் கோட்பாட்டை மாவோ ஏற்கவில்லை. சீனாவிற்கு இது ஏற்புடையதாக இருக்காது. என்று முடிவெடுத்தார். ஆகவே சீனாவில் நிலம் தனியார்மயப்படுத்தப்படவில்லை. சீன விவசாயிகளின் வரலாற்று ரீதியிலான மனநிலையும் இதற்கு ஒத்துழைத்தது.


பெரும்பான்மையான நிலமற்ற விவசாயிகள் ஏழை விவசாயிகள் கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்து கொண்டனர். மத்தியதர விவசாயிகள் நட்புச்சக்திpகளாக இருந்தனர். ஆனால் பணக்கார விவசாயிகளைப் பொறுத்தரை எப்போதுமே தனிமைப்படுத்தப்பட்டனர். பணக்கார விவசாயிகளை முழுமையாக எதிர்த்துக் கொள்ளவில்லை. மாவோவின் அந்த அணுகுமுறைதான் விவசாயப்புரட்சியின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது. இதனால் பெரும்பான்மையான கிராமவாசிகள் நிலங்களை தங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற பிரச்சினை எழவில்லை. இந்த அணுகுமுறை வெற்றி பெற்றதற்கு ஒரு வரலாற்றுக்காரணமும் இருக்கவே செய்கின்றது. 19ஆம் நூற்றாண்டில் சீனாவில் நடந்த தைபிங் புரட்சியைச் சுட்டிக்காட்டலாம். போல்~;விக் கட்சி தோல்வியடைந்த இந்த பிரச்சினையில் மாவோ வெற்றிபெற்றார். இதுவே சீனா முதலாளித்துவ அடிப்படை இல்லாமல் இருப்பதற்கு ஒரு முக்கியக் காரணியாக சுட்டிக்காட்டப்படுவதுடன் சீனாவில் இன்றும் சோசலிசம் நிலைபெறுகின்றது.


சோவியத் ரஸ்யாவைப் பொறுத்தவரை அது உலக முதலாளித்துவ அமைப்பில் இருந்து விலகியிருந்து கொண்டு, கிழக்கு ஐரோப்பாவுடன் இணைந்த ஒரு ஒருங்கிணைந்த சோசலிச அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டது. அந்த முயற்சியில் ரஸ்யா உலக முதலாளித்திலிருந்து விலகி நின்று பெருமளவு வெற்றியை ஈட்டியதை மறுக்கமுடியாது என்றாலும் கிழக்கு ஐரோப்பாவினுடன் ஒருங்கிணைவை ஏற்படுத்துவதில் அந்தளவு வெற்றிபெற முடியவில்லை. ஆனால் சோவியத் சீனா ஒருங்கிணைப்பு என்பது எப்போதும் இல்லாமல் போனது. மாவோ தனக்குரிய வழியில் தனிவழியைத் தேர்ந்து எடுத்துக் கொண்டார். உலகமயமாக்கல்pல் சீனா தனது உற்பத்தியை ஏற்றுமதி சார்ந்ததாக மாற்றிக்கொண்டது. இதனால் ரஸ்யாவிடமிருந்து நிரந்தரமாக பிரிந்து நிற்க வேண்டியதாயிற்று.  

1980களில் இருந்து மரபுரீதியிலான மாக்சிச – லெனினிச சிந்தாந்தத்திலிருந்த கிழக்கு ஐரோப்பிய கம்யூனிச நாடுகளும், சோவியத் யூனியனும் பெரும் பொருளாதார அவலத்திற்கு உள்ளாகத் தொடங்கின. இந்நிலைமை சீனாவினை அச்சம் கொள்ளச் செய்தது. ஆயினும் 1990 ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் வீழ்ச்சி கம்யூனிச சித்தாந்தத்தினை வலுவிழக்க வைத்ததுடன் சீனாவின் கம்யூனிசப் பொருளாதார முறைமையினையும் மறுசீரமைக்க வைத்தது. சோவியத் யூனியனுக்கு ஏற்பட்ட அவலம் சீனாவிற்கு ஏற்படாமல் இருப்பதற்கு சீனத்தலைவர்கள் “சோசலிச சந்தைப் பொருளாதாரம்” என்ற புதிய பொருளாதாரக் கொள்கையினை அறிமுகப்படுத்தினார்கள். இது பின்னர் “சீனா மாதிரியிலான முதலாளித்துவம்” எனவும் அழைக்கப்பட்டது.


1978ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த டெங் செயாப்பிங் (னுநுNபு ஓஐயுழுPஐNபு)  சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தினை முன்வைத்தார். 1978ஆம் ஆண்டு சீனாவில் பொருளாதார சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து சீனாவின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்களவிற்கு வளர்ச்சியடையத் தொடங்கியது. 1953 ஆம் ஆண்டிலிருந்து 1978 ஆம் ஆண்டுவரையில் சீனாவின் உண்மையான வருடாந்த மொத்தத் தேசிய உற்பத்தி 6.7மூ மாக இருந்ததாக சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவித்திருந்தன. பொருளாதார சீர்திருத்தம் 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து 2011ஆம் ஆண்டு காலப்பகுதி வரையில் சீனாவின் வருடாந்த சராசரி மொத்த தேசிய உற்பத்தி 9.6மூ மாக வளர்ச்சியடைந்ததாகவும் சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயினும் 1992ஆம் ஆண்டு ஆனிமாதமே முதல்தடவையாக சோசலிச சந்தைப் பொருளாதாரம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சீனாவின் பொருளாதாரம் மறுசீரமைக்கப்படுகிறது என டெங் செயாபிங் தென்சீனாவில் நிகழ்த்திய உரையொன்றில் தெரிவித்திருந்தார்.


சோசலிசப் சந்தைப் பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் சீனாவின் பொருளாதாரம் மிக வேகமாக வளரத் தொடங்கியுள்ளது. எதிர்காலத்தில் ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியினை வி;ட சீனாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து சீனாவினை உலகின் பெரும் பொருளாதாரச் சக்தியாக மாற்றிவிடலாம் என்று பல ஆய்வாளர்கள் எதிர்வு கூறுகின்றார்கள்.


கம்யூனிச சோசலிச அரசியல் சூழலில் வலுவான மாற்றத்திற்கான அடித்தளத்தை அமைத்தார் டெங் சியாபிங். அதன் முதல் கட்டமாக சோவியத் பொருளாதார மாதிரியின் அமைப்பை முற்றிலுமாக மாற்றியமைத்த அவர், பின்னர் சீனாவின் தேவைகளுக்கு ஏற்ப படிப்படியாக சோசலிச அடிப்படையில் பொருளாதாரத்தில் நவினமயமாக்கல் செயல்முறையை தொடங்கினார்.


சோவியத் ரஸ்யா பரப்பளவில் மிகப்பெரியது. உஸ்பெகிஸ்தான், கிர்கிசுத்தான், கஸகஸத்தான் உள்ளிட்ட பல நாடுகள் சோசலிச ரஸ்யாவின் அங்கமாக இருந்தாலும் அவை மொழி கலாசாரத்தால் பிரிந்து பட்ட நிலப்பரப்புக்கள். அத்தனை கோடி மக்களையும் மிகப்பெரிய நிலப்பரப்பையும் ஒரு குடை கீழ் நீண்டகாலம் ஆள்வது கடினம். பிராந்திய உணர்வுகளுக்கு கோபர்சேவ் மதிப்பளித்தார். அதே நேரம் அமெரிக்;கா சோவியத் ரஸ்யாவை சிதைக்க தன்னால் இயன்ற அளவு முயற்சி செய்தது. ஐரோப்பிய பகுதி ரஸ்ய நாடுகளை தன் பக்கம் ஈர்த்து ஒன்றியத்தை உடைத்தது.


ஆனால் அமெரிக்காவின் இந்த உள்ளடி வேலைகள் சீனாவில் செல்லுபடியாகவில்லை. ஏனெனில் சீனா ஒரே மொழி கலாசாரத்தை கொண்டது. பிராந்திய உணர்வுகள் தலை தூக்காமல் தொடர்ந்து அடக்கி வருகிறது. அதேநேரம் எல்லோருக்காமான வலுவான பொருளாதாரத்தை உறுதியளித்துள்ளது. இன்றைய தேதியில் சீனர்களின் வாங்கும் சக்தி வளர்ந்த ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக உள்ளது. சீனாவின் வளர்ச்சிக்கு வலுவான ஒன்றிய அரசே என மக்கள் நம்புவதால் அந்த சோசலிச ஆட்சி தொடர்கிறது. ஆனாலும் அமெரிக்கா தொடர்ந்து உள்ளடி வேலைகளை ஹாங்காங்கில் செய்து கொண்ட தான் இருக்கிறது. அதுமட்டுமன்றி சோவியத் ரஸ்யா கடைசிவரை சோசலிசக் கொள்கையை விடாப்பிடியாகக் பிடித்துக்கொண்டது அதனாலேயே அங்கு சோசலிசம் அழிந்தது. சீனா 1979இலேயே சோசலிசத்திற்கு பெரம்பாலும் விடைகொடுத்தது. இப்போது சீனாவில் உள்ளது பெயரளவில் சோசலிசம். சீனர்கள் இதனை “சீனப் பண்புகள் கொண்ட சோசலிசம்” என்று அழைப்பர்.


சோசலிசத்தின் உண்மையான நோக்கம் என்பது “கொல்லையடிக்கும் காலக்கட்டத்தில்” இருந்து மனிதச்சமூகத்தை விடுவித்து அதனினும் உயரிய ஒரு மனிதச்சமூகத்தையும் அதன் வளர்ச்சியையும் சாத்தியப்படுத்துவது தான் எனினும் பொருளாதார அறிவியலின் தற்போதைய நிலையானது எதிர்கால சோசலிச சமூகத்திற்கு சிறிய வெளிச்சத்தை மட்டுமே காட்டமுடியும்.

சுரேஸ்குமார்  சஞ்சுதா

No comments:

Post a Comment

1800 – 2000 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கைப் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்திய காரணிகள்

இலங்கையின் பொருளாதாரத்தினை பொதுவாக அபிருத்தியடைந்து வரும் அல்லது குறைவிருத்திப் பொருளாதாரம் என வரையறை செய்வது மரபாகும். அத்துடன் இலங்கையின் ...